காவிரி தண்ணீர் இல்லாமல் பாதித்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் : அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

2016-25-10-14-31-21

சென்னை: காவிரி தண்ணீர் இல்லாமல் பாதித்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்த ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்கு அரசு வழங்க வலியுறுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றவும் அனைத்து கட்சி சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளை டெல்லி அழைத்து சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தள்ளிப் போடும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் இவ்விகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக தனது நிலையை மாற்றிக் கொண்ட மத்திய அரசுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்ப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தினார். உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்காவிட்டால் மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றார். அரசியல் ஆதாதயத்திற்காக அனைத்து கட்சி கூட்டத்தை தி.மு.க கூட்டவில்லை என்றார். மேலும் காவிரி பிரச்சனையில் ஊடகங்களுக்கும் ஒருமித்த கருத்து வேண்டும் என குறிப்பிட்டார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>