காவிரி  டெல்டாவில் பெட்ரோல் எண்ணெய் கிணறுகளால்பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் கிராம மக்கள்.

காவிரி  டெல்டாவில் பெட்ரோல் எண்ணெய் கிணறுகளால் ஏற்படும் பாதிப்பு. பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் கிராம மக்கள்.

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளும் எண்ணை கசிவுகளும் விளை நிலங்களை மட்டும் பாதிப்பதில்லை அப்பகுதியில் வாழும் மக்களையும் கால்நடைகளையும் பெரிதும் பாதிக்கின்றன.

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளும் எண்ணை கசிவுகளும் விளை நிலங்களை மட்டும் பாதிப்பதில்லை அப்பகுதியில் வாழும் மக்களையும் கால்நடைகளையும் பெரிதும் பாதிக்கின்றன.

   காவிரி  டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு ஓ.என்.ஜி.சி என்கிற ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் மூலம் பெட்ரோல் கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், நாகை மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளை அமைத்து எண்ணெய் எடுத்து வருகிறது. இவ்வாறு எடுக்கப்படும் எண்ணெய் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு நரிமனம் சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரித்து பெட்ரோல், டீசல் என பிரிக்கப்பட்டு வர்த்தகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

 எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களிலும், குழாய்கள் செல்லும் பாதையிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு கசிவு மற்றும் எண்ணை கழிவுகள் மூலம் காற்று மாசடைந்து உயிரினங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது.

    திருவாரூர் மாவட்டம் வெள்ளக்குடியில் கடந்த 26 ஆண்டுகளாக செயல்படும் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ள எண்ணை கிணறுகள் மூலம் இதுவரை அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். வெள்ளக்குடி கிராமத்தில் கீழத்தெருவில் தற்போது 30 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். எண்ணை கிணறுக்கு மிக அருகில் குடியிப்புகள் இருப்பதால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை என கூறுகின்றனர் அப்பகுதிவாசிகள்.

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளும் எண்ணை கசிவுகளும் விளை நிலங்களை மட்டும் பாதிப்பதில்லை அப்பகுதியில் வாழும் மக்களையும் கால்நடைகளையும் பெரிதும் பாதிக்கின்றன.

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளும் எண்ணை கசிவுகளும் விளை நிலங்களை மட்டும் பாதிப்பதில்லை அப்பகுதியில் வாழும் மக்களையும் கால்நடைகளையும் பெரிதும் பாதிக்கின்றன.

  ஓஎன்ஜிசி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளும் எண்ணை கசிவுகளும் விளை நிலங்களை மட்டும் பாதிப்பதில்லை அப்பகுதியில் வாழும் மக்களையும் கால்நடைகளையும் பெரிதும் பாதிக்கின்றன. குறிப்பாக அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தோல் வியாதிகளும் உடல் முழுதும் கொப்பலங்கள் தோன்றி உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

  விவசாய பணிகள் நடைபெறாத காலங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு இந்த கிராமத்தில் இருந்து கூலி வேலைக்காக பலரும் செல்கின்றனர். அப்படி வேலைக்காக சென்ற பலருக்கும் பல நோய்கள் ஏற்பட்டு தற்போது வீடுகளில் நோயாளிகளாக முடங்கி கிடக்கின்றனர். நோய்வாய்பட்டவர்களில் ஒருவரான ஜோதிபாஸ் என்கிற இளைஞர் கூறுகையில்…

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளும் எண்ணை கசிவுகளும் விளை நிலங்களை மட்டும் பாதிப்பதில்லை அப்பகுதியில் வாழும் மக்களையும் கால்நடைகளையும் பெரிதும் பாதிக்கின்றன.

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளும் எண்ணை கசிவுகளும் விளை நிலங்களை மட்டும் பாதிப்பதில்லை அப்பகுதியில் வாழும் மக்களையும் கால்நடைகளையும் பெரிதும் பாதிக்கின்றன.

    ஓஎன்ஜிசி நிறுவனத்தில் கழிவு மனல் மூட்டைகளை தலையில் சுமந்து சென்றதால் தனக்கு தலை முழுவதும் தோல் உரிந்து காயங்கள் ஏற்பட்டதாக கூறினார். தங்கள் நிறுவனத்தால் தான் தனக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார் அந்த இளைஞர். மேலும் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலைக்கு சென்ற பலருக்கும் உள்ளங்கைகளில் வெடிப்பு, தோல் உரிதல், சுவாசக் கோளாறு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வேறு வேலைகளுக்கும் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

    மேலும் சிறு வயதினருக்கு பல வியாதிகள் ஏற்பட்டு இளம் வயதிலேயே இறந்த சோகங்களும் இக்கிராமத்தில் அரங்கேரியுள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

  ஓஎன்ஜிசி நிறுவனத்தை தங்கள் பகுதியிலிருந்து அப்புறபடுத்த வேண்டும் அல்லது நாங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்த இந்த இடத்தைவிட்டு போகவும் தயாராக உள்ள்ளோம் எங்களுக்கு அரசு பாதுகாப்பான இடத்தை வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் எனபதே இப்பகுதியில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>