காவிரி: அனைத்து கட்சித் தலைவர்களுடன்  பிரதமரை ஜெயலலிதா சந்திக்க வேண்டும்:பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு

சித்தராமய்யா மீண்டும் மீண்டும் பொய் சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற முயலுகிறார். நேற்று காலை நிலவரப்படி கூட கபினியில் 15.09 டி.எம்.சி, ஹேமாவதியில் 20.68, ஹாரங்கியில் 7.78 டி.எம்.சி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் 18.60 டி.எம்.சி என மொத்தம் 62.15 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இதை இரு மாநிலங்களும் வெற்றிகரமாக பகிர்ந்து கொள்ள முடியும்.

சித்தராமய்யா மீண்டும் மீண்டும் பொய் சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற முயலுகிறார். நேற்று காலை நிலவரப்படி கூட கபினியில் 15.09 டி.எம்.சி, ஹேமாவதியில் 20.68, ஹாரங்கியில் 7.78 டி.எம்.சி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் 18.60 டி.எம்.சி என மொத்தம் 62.15 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இதை இரு மாநிலங்களும் வெற்றிகரமாக பகிர்ந்து கொள்ள முடியும்.

காவிரி: அனைத்து கட்சித் தலைவர்களுடன் பிரதமரை ஜெயலலிதா சந்திக்க வேண்டும்.

கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தலைமையில் நேற்று நடந்த அம்மாநில அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஆற்றில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான இந்த முடிவு கண்டிக்கத்தக்கதாகும்.

காவிரிப் பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழகத்தை தனது வடிகாலாகவே கர்நாடகம் பயன்படுத்தி வருகிறது. அளவுக்கு அதிகமாக மழை பெய்து அணைகளில் தேக்கி வைக்க இடமில்லை என்றால்,  காவிரியில் தண்ணீரை திறந்து விடுவதும், மழை குறைவாக பெய்யும் காலங்களில் மொத்த நீரையும்  எடுத்துக் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பதும் கர்நாடக அரசின் வாடிக்கையாகி விட்டன.  காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால், காவிரி பாசன மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவைப் சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டது. சம்பா சாகுபடியையாவது செய்ய வசதியாக காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழக விவசாயிகள் நேரில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தண்ணீர் தர இயலாது என கைவிரித்திருக்கிறார் சித்தராமய்யா.

காவிரியில் தண்ணீர் திறந்து விடாததற்கு கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் எதுவுமே ஏற்றுக் கொள்ள முடியாதவை ஆகும். கர்நாடகத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளிலும் சேர்த்து மொத்தம் 51 டி.எம்.சி மட்டுமே நீர் இருப்பதாக  சித்தராமய்யா கூறியுள்ளார். இது தவறான தகவல். இவ்வாறு கூறுவதன் மூலம் கர்நாடகமே வறட்சியில் வாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சித்தராமய்யா முயலுவதை நேற்று முன்நாள் நான் வெளியிட்ட  அறிக்கையில் விளக்கியிருந்தேன். ஆனால், சித்தராமய்யா மீண்டும் மீண்டும் பொய் சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற முயலுகிறார். நேற்று காலை நிலவரப்படி கூட கபினியில் 15.09 டி.எம்.சி, ஹேமாவதியில் 20.68, ஹாரங்கியில் 7.78 டி.எம்.சி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் 18.60 டி.எம்.சி என மொத்தம் 62.15 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இதை இரு மாநிலங்களும் வெற்றிகரமாக பகிர்ந்து கொள்ள முடியும்.

அதற்கு மாறாக தமிழகத்திற்கு தண்ணீர் தரும் பேச்சுக்கே இடமில்லை என்று சித்தராமய்யா  கூறுகிறார். சித்தராமய்யாவின் வார்த்தைகள் முன்னுக்குப் பின் முரணாகவே உள்ளன. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஒரு கட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று கூறிய அவர், இன்னொரு கட்டத்தில்,‘‘ நாங்கள் இடர்பாடு நிறைந்த ஆண்டை எதிர்கொண்டு வருகிறோம். எனவே, இருக்கும் நீரை இடர்ப்பாட்டு கால நீர்ப்பகிர்வு முறையில் தான் இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இந்த கொள்கை தான் கடைபிடிக்கப்பட்டு வந்தது. நீதிமன்றங்களும் இதைத் தான் சொல்லியிருக்கின்றன. ஆனால், தமிழகமோ சாதாரண ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அதிக தண்ணீர் தர வேண்டும் என்று கோருகிறது’’ என்று கூறினார். இரு மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான இடர்ப்பாட்டுக் கால நீர்ப்பகிர்வு முறை இன்னும் உருவாக்கப்படாத நிலையில், காவிரியில் கிடைக்கும் நீரை  இரு மாநிலங்களும் சமமாக பகிர்ந்து கொள்வது தான் இரு மாநில உழவர்களுக்கும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால், அதன்படி கூட தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாதது கண்டனத்திற்குரியது.

நடப்பு பாசன ஆண்டு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கியது. அன்று முதல் கடந்த 26 ஆம் தேதி வரை கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு அணைகளுக்கும் மொத்தம் 130.97 டி.எம்.சி தண்ணீர் கிடைத்துள்ளது.  கடந்த சில நாட்களாக கர்நாடக அணைகளுக்கு தினமும் ஒரு டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதில் பாதியை தமிழகத்திற்கு தருவதாக வைத்துக் கொண்டால் கூட கடந்த 3 மாதங்களில் கர்நாடகா 65 டி.எம்.சி நீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்திற்கு கிடைத்த தண்ணீரின் அளவு 20 டி.எம்.சிக்கும் குறைவு ஆகும்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்யப்பட வேண்டும் என்றால் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குரிய காவிரி நீரை பெற்றாக வேண்டும். இதற்காக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்திருப்பது ஒருபுறம் இருந்தாலும், அரசியல்ரீதியிலான அழுத்தங்களைத் தர வேண்டியதும் அவசியமாகிறது. எனவே, இதுகுறித்து விவாதிப்பதற்காக அடுத்த இரு நாட்களுக்குள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை  முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு  புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் தெரிவித்து, தமிழகத்திற்கு தண்ணீர் விடுமாறு வலியுறுத்த வேண்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>