காவிரியில் தண்ணீர் திறந்ததை அடுத்து 83 அடியை எட்டிய மேட்டூர் அணை

201607201605289961_mettur-dam-water-level-exceeded-53-feet_secvpf

மேட்டூர்: காவிரியில் தண்ணீர் திறந்ததை அடுத்து மேட்டூர் அணையின் நீர் மட்டம் 83 அடியாக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறந்து விட்ட தண்ணீர் கடந்த ஒரு வர காலமாக வந்துக்கொண்டு இருக்கிறது. வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் நீர் மட்டம் உயர தொடங்கியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் நீர் மட்டம் 83 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையின் தண்ணீர் இருப்பு 45 டி.எம்.சி.யாக உள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>