காவிரியில் இப்போது தண்ணீர் திறக்க முடியாது : கர்நாடக அரசு கைவிரிப்பு

சித்தராமையா, காவிரி டெல்டா பகுதியில் உள்ள 3 அணைகளிலும் தண்ணீர் குறைவாக உள்ளது. ஹாரங்கி அணை மட்டுமே நிரம்பியுள்ளது. கர்நாடக மாநில விவசாயத்திற்கு ‘தண்ணீர் திறக்கமுடியாத சூழ்நிலை உள்ளது. மழை பெய்தால் அனைத்து பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துவிடும். இவ்வாண்டு காவிரி டெல்டா பகுதியில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இரு மாநில விவசாயிகளையும் பருவமழை ஏமாற்றிவிட்டது

சித்தராமையா, காவிரி டெல்டா பகுதியில் உள்ள 3 அணைகளிலும் தண்ணீர் குறைவாக உள்ளது. ஹாரங்கி அணை மட்டுமே நிரம்பியுள்ளது. கர்நாடக மாநில விவசாயத்திற்கு ‘தண்ணீர் திறக்கமுடியாத சூழ்நிலை உள்ளது. மழை பெய்தால் அனைத்து பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துவிடும். இவ்வாண்டு காவிரி டெல்டா பகுதியில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இரு மாநில விவசாயிகளையும் பருவமழை ஏமாற்றிவிட்டது

தமிழக விவசாயிகள் சந்தித்தபோது முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

பெங்களூரு : காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழக விவசாயிகள் நேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பெங்களூருவில் சந்தித்தனர். ஆனால், இப்போதைக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று அவர் கைவிரித்து விட்டார். கர்நாடக-தமிழகம் இடையில் ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் விஷயத்தில் மோதல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த மாதம் தமிழகத்திற்கு ஓரளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இம்மாதம் டெல்டா பகுதியில் உள்ள நான்கு அணைகளும் நிரம்பாத நிலையில், தமிழக பாசனத்திற்கு மட்டுமில்லாமல், கர்நாடக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்க முடியாது என்று கடந்த வாரம் மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

முதல்வருடன் சந்திப்பு: மேலும் அணைகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு மட்டும் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தது. இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக மாநில அரசு ஆகஸ்ட் மாதம் திறந்துவிட வேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிடகோரி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் முடிவு கர்நாடகாவில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பெங்களூருவில் உள்ள முதல்வரின் அரசு இல்லத்தில் சித்தராமையாவை நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.செல்லமுத்து, தி.மு.க. விவசாய அணி செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கர்நாடக மாநில விவசாய சங்கத்தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகரின் ஒத்துழைப்புடன் நேரில் சந்தித்து பேசினர்.

வஞ்சிக்க மாட்டேன்: தமிழகத்தில் ஏற்கனவே 2 சாகுபடிகள் தண்ணீரில்லாமல் கருகிவிட்டது. வரும் செப்டம்பர் முதல்வாரத்தில் சம்பா சாகுபடி தொடங்குகிறது. அந்தப் பயிர் செழிக்க கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றனர். மனுவைப் பெற்றுக் கொண்ட சித்தராமையா, காவிரி டெல்டா பகுதியில் உள்ள 3 அணைகளிலும் தண்ணீர் குறைவாக உள்ளது. ஹாரங்கி அணை மட்டுமே நிரம்பியுள்ளது. கர்நாடக மாநில விவசாயத்திற்கு ‘தண்ணீர் திறக்கமுடியாத சூழ்நிலை உள்ளது. மழை பெய்தால் அனைத்து பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துவிடும். இவ்வாண்டு காவிரி டெல்டா பகுதியில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இரு மாநில விவசாயிகளையும் பருவமழை ஏமாற்றிவிட்டது. எங்களது நிலைமையை உங்களிடம் தெளிவாக விளக்கியுள்ளேன். தண்ணீர் திறக்கும் விஷயத்தில் கர்நாடகம் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது என்று கூறினார்.

மேலும், கர்நாடக காவிரி டெல்டா பகுதியில் 50 டி.எம்.சிக்கும் குறைவான தண்ணீர் உள்ளது. இது குடிநீருக்கே போதுமானதாகயில்லை. சுமார் 40 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. நீங்கள் விவசாயத்தி–்ற்கு தண்ணீர் கேட்கிறீர்கள். எங்களுக்கு குடிநீருக்கே பஞ்சமாகவுள்ளது. நான் சொல்வது பொய் என்று நீங்கள் நினைத்தால் டெல்டா பகுதியில் உள்ள நான்கு அணைகளு–்க்கும் நீங்கள் நேரில் சென்று பார்வையிடுங்கள். அதற்கான ஏற்பாடு செய்கிறேன். விவசாயி என்று வரும்போது கர்நாடக விவசாயி, தமிழக விவசாயி என்ற பேதம் பார்ப்பதில்லை. நல்ல மழை பெய்து அணையில் தண்ணீர் இருந்தால், திறக்காமல் வஞ்சிக்கமாட்டோம். இருப்பினும் உங்களது கோரிக்கையை பரிசீலனை செய்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவேன். மழை கைகொடுத்தால் எல்லாம் நல்லபடி நடக்கும் என்றார்.

நாளை அனைத்து கட்சி கூட்டம்

தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் விதான சவுதாவில் நாளை நடைபெறுகிறது. இது குறித்து நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது: அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளோம். இருக்கிற நீரை குடிநீருக்காக பயன்படுத்த வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்து ஏற்படவேண்டும் என்பதற்காக 27ந்தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்நிலையிலும் மாநில அரசின் நலனை விட்டுக்கொடுக்கும் வகையில் செயல்படமாட்டோம் என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>