காவிரியிலிருந்து தமிழகத்திற்கு இனிமேல் நீர் திறக்க இயலாது : கர்நாடகா அறிக்கை தாக்கல்

 காவிரியிலிருந்து தமிழகத்திற்கு இனிமேல் நீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதாக கர்நாடகா, காவிரி மேற்பார்வைக் குழு கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு இனிமேல் நீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதாக கர்நாடகா, காவிரி மேற்பார்வைக் குழு கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

டெல்லி: தமிழகத்திற்கு இதுவரை 13 டி.எம்.சி தண்ணீர் காவிரியிலிருந்து திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா கூறியுள்ளது. டெல்லியில் காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தனது தரப்பு அறிக்கையை தாக்கல் செய்த கர்நாடகா, தங்களது மாநிலத்தில் 4 அணைகளில் 27 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜுலை மாதம் வரை கர்நாடக மாநிலத்தின் குடிநீர் தேவைக்கு 21 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் கர்நாடகத்தில் மழை 18 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகவும் தனது அறிக்கையில் அந்த மாநில அரசு கூறியுள்ளது. எனவே காவிரியிலிருந்து தமிழகத்திற்கு இனிமேல் நீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதாக கர்நாடகா, காவிரி மேற்பார்வைக் குழு கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>