காலா’ பட கதை விவகாரம்! ரஜினி, ரஞ்சித்துக்கு மீண்டும் அவகாசம்

Rajni_16_15008_12363

‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. நடிகர் ரஜினி ‘காலா’ படத்துக்காகத் தனது இரண்டாம்கட்ட படப்பிடிப்பையும் முடித்துவிட்டு அமெரிக்கா சென்றிருந்தார்.

தற்போது ரஜினி சென்னை திரும்பியிருக்கும் நிலையில், ‘காலா’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும் இந்தப் படத்தின் பெயரை நான் ஏற்கெனவே பதிவும் செய்துவிட்டேன் என்றும் ராஜசேகர் என்பவர் புகார் மனு ஒன்றை சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மே மாதம் 30-ம் தேதி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், காலா படத்தின் தலைப்பு மற்றும் கதைக்கு உரிமை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜசேகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், ரஜினி மற்றும் பா.ரஞ்சித் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகி பதில் அளிக்க அவகாசம் கேட்டிருந்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு (இன்று) நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

அதன்படி, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, படக்குழு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பில் அனைவரும் இருப்பதால், பதில்மனு அளிக்க காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பதில் மனுத்தாக்கல் செய்ய ரஜினி மற்றும் பா.ரஞ்சித் தரப்புக்கு மீண்டும் ஒரு வாரம் காலம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>