காதல் திருமணம் செய்த ஆசிரியை காரில் கடத்தல்

Daily_News_5725475549698

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி சலங்கபாளையத்தை சேர்ந்த வினோத் மகன் கல்கி(21). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் கல்லூரியில் பி.டெக் பயோ டெக்னாலஜி படித்து வந்தார். அதே கல்லூரியில் ஓசூரை சேர்ந்த கோவிந்தன் மகள் தேஜா(21) என்பவரும் பி.டெக். ஐடி படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர். அவர்களுடைய காதல் தேஜாயின் பெற்றோருக்கு தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பியது.

அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சீர்திருத்த திருமணம் செய்து கொண்டு கல்கியின் வீட்டில் வசித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு தேஜா பவானி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் முன்தினம் அங்கு வந்த சிலர் தேஜாயை காரில் கடத்தி சென்றனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டு காரை விரட்டிச்சென்று மாரப்பம்பாளையம் அருகே மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் காரில் இருந்தவர்களையும் தேஜாயையும் கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் தேஜாயை கடத்தியவர்கள் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>