காதலுக்காக நாக்கை அறுத்துக் கொண்ட வாலிபர்

web-heart-bandage-crack-broken-cindy-schultz-cc

தாம்பரம், டிச.4காதல் தோல்வியால் நாக்கையும், கைகள் நரம்பையும் அறுத்துக்கொண்ட வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது; பல்லாவரம் அடுத்துள்ள பொழிச்சலூர் ஆண்டாள் நகரில் தனது அக்கா வீட்டில் தங்கி பிளாம்பர் வேலை பார்த்து வருபவர் பிரசாந் (வயது 24). நேற்றிரவு அவர் சாப்பிட்டு விட்டு அறைக்கு உறங்க சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் அறைக்கு சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் , பிரசாந் நாக்கு, கைகளில் நரம்புகள் போன்றவற்றை பிளேடால் அறுத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பிரசாந் ஒரு பெண்ணை காதலித்தராம் அவருக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் இவ்வாறு செய்து கொண்டதாக தெரிகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>