காதலிக்க வற்புறுத்தி நடுரோட்டில் மானபங்கம் நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை

ஒருதலைக் காதலில் கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 5 பெண்கள் பலியாகியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் பெண் இன்ஜினியர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் விழுப்புரத்தில் நவீனா, கரூரில் கல்லூரிக்குள் மாணவி சோனாலி, தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது விருத்தாசலத்தைச் சேர்ந்த புஷ்பலதாவும் பலியாகியுள்ளார்.

சென்னை : விருத்தாசலம் அருகே காதலிக்க வற்புறுத்தி வாலிபர் நடுரோட்டில் மானபங்கப்படுத்தியதால் நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஏனாதிமேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. கூலி ேவலை செய்து வருகிறார். இவரது மகள் புஷ்பலதா(21). இவர், விருத்தாசலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர், தினமும் தனது கிராமத்தில் இருந்து சைக்கிளில் விருத்தாசலம் சென்று வந்தார். அருகில் உள்ள பூதாமூர் கிராமத்தை சேர்ந்த தனசேகர்(22), என்ற வாலிபர் புஷ்பலதாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதல் குறித்து புஷ்பலதாவிடம் தெரிவித்தபோது, காதலை அவர் ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த 31ம் தேதி பணி முடித்து, மருத்துவமனையிலிருந்து சைக்கிளில் புஷ்பலதா வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது புஷ்பலதாவை, தனசேகர் வழிமறித்து தனது காதலை ஏற்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த தனசேகர், புஷ்பலதாவை கெட்ட வார்த்தையில் திட்டி, என்னை காதலிக்காவிட்டால் நீ உயிரோடு இருக்கக்கூடாது எனக்கூறி சுடிதாரை பிடித்து இழுத்து கீழே தள்ளி மானபங்கபடுத்தியுள்ளார்.

கீழே விழுந்தவர், எழுந்து சத்தம் போட்டபடி ஓட முயன்றார். ஆனால் அவரை விடாமல் பிடித்து இழுத்த தனசேகர், அவரது கழுத்தை துப்பட்டாவால் நெரித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை தள்ளி விட்டுவிட்டு, தப்பிய புஷ்பலதா நேராக வீட்டுக்கு சென்றார். இந்த தகராறு நடந்தபோது, சாலையில் சென்றவர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால், நடுரோட்டில் நடந்த சம்பவத்தால் அவமானம் தாங்காமல் வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டுகொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த புஷ்பலதா 9 நாட்களுக்கு பின் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் புஷ்பலதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றனர். மேலும் பெண்ணின் குடும்பத்தாருடன் பாமக மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் ஏராளமான பாமகவினரும் திரண்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவலறிந்த ஏடிஎஸ்பி அனுசுயா டெய்சி மற்றும் போலீசார் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில், தனசேகரை போலீசார் கைது செய்து, கடலூர் சிறையில் அடைத்தனர்.

ஒருதலைக் காதலில் கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 5 பெண்கள் பலியாகியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் பெண் இன்ஜினியர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் விழுப்புரத்தில் நவீனா, கரூரில் கல்லூரிக்குள் மாணவி சோனாலி, தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது விருத்தாசலத்தைச் சேர்ந்த புஷ்பலதாவும் பலியாகியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>