காதலரை மணக்க கொடைக்கானல் ரிஜிஸ்டர் ஆபீஸில் விண்ணப்பித்தார் இரோம் சர்மிளா! மு.திலிப்

iromsharmila_11448

மணிப்பூர் போராளி இரோம் சர்மிளாவுக்கு, அவரது காதலருடன் இன்னும் 30 நாள்களில் கொடைக்கானலில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இரோம் சர்மிளா, தற்போது கொடைக்கானலில் தங்கி இருக்கிறார். தனது இளமைக்காலம் முழுவதையும் போராட்டத்தில் கழித்த இரோம் சர்மிளா, தேர்தல் கொடுத்த தோல்வியால் மணிப்பூரை விட்டு வெளியேறினார். மணிப்பூர் மக்கள், தேர்தலில் தன்னை தோல்வியடையச் செய்ததால், வேதனையை மறப்பதற்காக கொடைக்கானலில் குடியேறினார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தனது காதலர், தேஸ்மாண்ட் ஹட்டின் ஹோவுடன் கொடைக்கானலில் உள்ள அப்சர்வேட்டரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளார். விரைவில் தனது காதலரைத் திருமணம் செய்துகொள்வேன் எனத் தெரிவித்திருந்தார். காதலருக்கு அவரது நாட்டிலிருந்து கிடைக்கவேண்டிய திருமணம் தொடர்பான அனுமதிக் கடிதத்துக்காகக் காத்திருந்தனர். தற்போது, அவருக்கு அனுமதிக் கடிதம் கிடைத்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு, தனது காதலரைத் திருமணம்செய்துக்கொள்வதற்கான விண்ணப்பத்தை, கொடைக்கானல் பதிவாளர் அலுவலகத்தில் இரோம் சர்மிளா அளித்துள்ளார். அந்த மனுவை ஏற்ற அதிகாரிகள், 30 நாள்கள் அனுமதிக் காலம் கொடுத்துள்ளனர். இரோம் சர்மிளாவின் காதலர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், இந்தியாவில் யாருக்கேனும் இந்தத் திருமணத்தில் ஆட்சேபனை உள்ளதா என்பதைத் தெரிவிக்கவே இந்த அனுமதிக் காலம். எவரும் ஆட்சேபனை தெரிவிக்காதபட்சத்தில், இன்னும் 30 நாள் கழித்து, அவர்களுக்குத் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>