காணாமல் போன ஏ.என்.32 ரக விமானங்கள் உலகம் முழுவதும் 11 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன

காணாமல் போன ஏ.என்.32 ரக விமானங்கள் உலகம் முழுவதும் 11 நாடுகளின் ராணுவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன

காணாமல் போன ஏ.என்.32 ரக விமானங்கள் உலகம் முழுவதும் 11 நாடுகளின் ராணுவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன

காணாமல் போன ஏ.என்.32 ரக விமானங்கள் உலகம் முழுவதும் 11 நாடுகளின் ராணுவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அன்டோனவ் நிறுவனத்தால் இந்த விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக 4 மணி நேரம் 15 நிமிஷங்கள் பயணிக்கக் கூடியது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், இராக், கொலம்பியா, மெக்சிகோ, பெரு,சூடான், அங்கோலா உள்ளிட்ட 11 நாடுகளின் ராணுவத்தில் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில், அதிகபட்சமாக இந்தியாவிடம் 101 ஏ.என். 32 ரக விமானங்கள் உள்ளன.

காணாமல் போன விமானத்தின் நீளம் 23.68 மீட்டர், அகலம் 29.20 மீட்டர். எடை 27 டன். மணிக்கு 540 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. ராணுவ வீரர்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு விரைவாக கொண்டு செல்லவும், சரக்குகளை எடுத்துச் செல்லவும், மருத்துவ உதவிக்காகவும், பாராசூட் படையினரை கொண்டு செல்லவும், பொருள்களை வானிலிருந்து தரையில் உள்ளவர்களுக்கு பாராசூட் மூலம் கொடுக்கவும், மிக முக்கிய நபர்களின் பயணங்களுக்கும், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கும் இந்த ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

1984ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப்படை இந்த ரக விமானங்களைப் பயன்படுத்திவருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி அருணாசல பிரதேச மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாட்டுகோடு அருகே இந்த ரக விமானம் முதல் முறையாக விபத்துக்குள்ளானது. அதில், 13 பேர் உயிரிழந்தனர். இப்போது விபத்துக்குள்ளானது இரண்டாவது முறையாகும்.

சூலூர் விமானப் படைத் தளத்தில், இந்த ரக விமானங்கள் 4 அல்லது 5 விமானங்கள் உள்ளதாகத் தெரிகிறது. இந்த வகை விமானங்களை இயக்க நன்கு பயிற்சிபெற்ற விமானிகள் சூலூர் விமானப் படைத் தளத்தில் உள்ளனர்.

வழக்கமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் சூலூரிலிருந்து அந்தமான் விமானப் படைத் தளத்துக்கு தாம்பரம் வழியாகப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.

இந்த வெள்ளிக்கிழமையும் காலை 6.45 மணிக்கு சூலூர் விமானப் படைத் தளத்திலிருந்து ஐந்து பேருடன் தாம்பரம் சென்ற விமானம் அங்கிருந்து புறப்பட்டு அந்தமான் செல்லும் வழியில் மாயமானது.

விடுமுறையில் தமிழகம் வரும் வீரர்கள் மற்றும் படைத் தளத்தில் பணிக்குச் செல்வோரும் இந்த விமானத்தில் பயணிப்பர். காணாமல் போன விமானியின் குடும்பத்தினர் சூலூர் விமானப் படைத் தள குடியிருப்பில் வசிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>