காஞ்சிபுரம், வேலூர், கடலூர், தூத்துக்குடியில் தீபா பேரவை கலைப்பு

jakkamma news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேலூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் தீபா பேரவை கூண்டோடு கலைக்கப்பட்டு ஒ.பி.எஸ். அணியில் இணைக்கப்பட்டடுள்ளது. அ.தி.மு.க.விலிருந்து தனியாக பிரிந்துள்ள ஒ.பி.எஸ். அணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம், வேலூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்கிளில் தீபா பேரவை கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. அதன் நிர்வாகிகள் அனைவரும் ஒ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளனர். மேலும் சில மாவட்டங்களில் தீபா பேரவை கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தீபா மற்றம் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே சென்னை ஆர்.கே.நகரில் தீபா ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்துள்ளனர். ஒ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தீபாவை முதலமைச்சர் ஆக்கவே கட்சி துவங்கவுள்ளதாக அவரது கணவர் மாதவன் கூறியுள்ளார். திருவேற்காட்டில் தமது ஆதவாளர்களை அவர் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஒன்று சசிகலா அணியாகவும் மற்றொன்று ஒ.பி.எஸ். அணியாகவும் செயல்பட்டு வருகின்றன. இதனால் அ.தி.மு.க.வில் அதிருப்தியடைந்த சிலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவை தலைமையேற்று செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>