காங்கிரஸ் செயல் தலைவர் ஆகிறார் பிரியங்கா காந்தி

201708150349373192_Priyanka-is-the-Congress-leader_SECVPF

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. அப்போது, கட்சி தலைமையில் மாற்றம் செய்ய வேண்டியது பற்றி கட்சி தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டதாகவும், அதையடுத்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், சோனியா காந்தியின் மகள் பிரியங்காவை காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கலாம் என்று யோசனை தெரிவித்ததாகவும் டெல்லி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.

இந்நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஊடக பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது:-

பிரியங்காவை காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்க சோனியா காந்தி எண்ணி இருப்பதாக வெளியான செய்தி, முற்றிலும் பொய்யானது. அடிப்படை ஆதாரமற்றது. தீய நோக்கமும், தேவையற்ற யூகங்களை உருவாக்கும் நோக்கமும் கொண்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>