காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் : குஜராத் சட்டசபையில் பரபரப்பு

குஜராத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சட்டசபையில் பிரச்னை எழுப்பி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரை கூண்டோடு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

குஜராத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சட்டசபையில் பிரச்னை எழுப்பி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரை கூண்டோடு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

காந்திநகர்: குஜராத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சட்டசபையில் பிரச்னை எழுப்பி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரை கூண்டோடு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். குஜராத்தில் அண்மையில் புதிய முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றார். தற்போது, சட்டபேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சட்டபேரவை இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் சங்கர்சிங் வகேலா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து உனா சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். உனா சம்பவம் குறித்து ஐகோர்ட் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் கையில் பேனருடன் வந்து அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, சபையில் முதல்வர் விஜய் ரூபானியும் இருந்தார். அமளியில் ஈடுபட்ட இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட மற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் மீண்டும் அவை கூடியதும், திரும்பவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேனர்களை உடலில் கட்டிக் கொண்டு வந்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து இன்று அவைக்கு வந்திருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரையும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த விவகாரம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 56 ஆக உள்ளது.

ஏற்கனவே உனா சம்பவத்தை சுட்டிக்காட்டி மாநிலத்தில் தலித்கள் மீதான தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளதாக குஜராத் காங்கிரஸ் தலைவர் பாரத் சிங் சோலங்கி தலைமையில் அக்கட்சியினர், ஜனாதிபதி பிரணாப்பை சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் சோனியாவையும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>