கவர்ச்சி ஒன்றும் தவறில்லை: கத்ரீனாகைப்

201703312059522536_salman2._L_styvpf

கத்ரீனாகைப் சமீபத்தில் சுமிதா பட்டேல் விருது மூலம் கவுரவிக்கப்பட்டார். இது வலைத்தளங்களில் பலருடைய சர்ச்சைக்கு உள்ளானது. ‘அந்த விருது செக்ஸியாக நடிக்கும் நடிகைகளுக்கு தரப்படுவது அல்ல’ என்று விமர்சித்தார்கள். அதோடுவிடாமல், ‘அவரைவிட சிறந்த நடிகைகள் பலர் இருக்கும்போது கத்ரீனாவுக்கு விருது எப்படி கிடைத்தது?’ என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

இந்த விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை தேடும்போது சில உண்மைகளை உணர்ந்துகொள்ள முடியும். நடிகையாக அறிமுகமான காலகட்டத்தில் கத்ரீனாகைப்பும் குணசித்திர வேடங்களில்தான் நடித்தார். ஆனால் நினைத்த அளவுக்கு அவரால் உயரமுடியவில்லை. உயர்ந்த இடத்தைப்பிடிக்க வேகம் காட்டினார். அப்போதுதான் அவர் கவர்ச்சிக்கு மாறினார்.

இன்றைய சினிமாவைப் பொறுத்தவரை செக்ஸியாக நடிக்கும் நடிகைகளால்தான் முதலிடத்தைப் பிடிக்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்றபடி தன்னையும் மாற்றிக்கொண்டு, தனது மார்க்கெட்டை தக்கவைத்துக்கொண்டார். சுமிதா பட்டேல் விருது மூலம் தன்னை கவுரவமான நடிகை என்றும் காட்டிக்கொண்டார்.

இன்று திரை உலகில் தாக்குப்பிடிப்பது நடிகைகளை பொறுத்தவரையில் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தங்களை நிலைப்படுத்திக்கொள்ள அவர்கள் போராடவேண்டியதிருக்கிறது. அந்த போராட்டத்தின் ஒருபகுதியாக ஆடை அளவு குறைந்து போகிறது.

அழகும், நடிப்புத்திறனும் எல்லா நடிகைகளுக்கும் அவசியம். ஆனால் அவை இரண்டும் நடிக்க வரும் எல்லோரிடமும் இருப்பதில்லை. அவை இருந்தாலும் எளிதில் முன்னேறிவிடமுடியும் என்று சொல்லும் நிலையும் இல்லை. அதனால் திரைக்கு வந்த பின்பு, தங்களை நிலைநிறுத்திக்கொள்ள என்ன செய்வது? என்று அவர்கள் யோசிக்கிறார்கள். அவர்களது முன்னோடிகள் கவர்ச்சியைத்தான் ஆயுதமாக பிரயோகித்து ரசிகர்களின் இதயங்களை வென்றிருக் கிறார்கள். இவர்களும் அதே ஆயுதத்தை சற்று கூர்தீட்டி காட்சிப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

சுமிதா பட்டேல் நிலைகூட அவ்வளவு ஒன்றும் ‘ஓகோ’ என்று இருந்ததில்லை. முதலில் அவர் தனது குணசித்திர நடிப்பால் ரசிகர்களை உருகவைத்தார். அவரது நடிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெறத்தான் செய்தது. ஆனால் அவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே காலகட்டத்தில் அவரைவிட பின்னால் இருந்த நடிகைகள் ஜீனத் அமன், பர்வின் பாபி போன்றோர் தங்கள் வழியை மாற்றி செக்ஸியாக நடித்து திடீரென்று முன்னணி இடத்தைப் பிடித்தனர். அவர்களுக்கு தர்மேந்திரா, ஜித்தேந்திரா, அமிதாப்பச்சன், சசிகபூர் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நல்ல கதாபாத்திரங் களும் அவர்களை தேடிவந்தன.

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகுதான் இந்த உண்மையை சுமிதா பட்டேல் உணர்ந்துகொண்டார். பின்பு அவரும் செக்ஸியாக நடிக்க ஒத்துக்கொண்டார். ‘நமக் ஹலால்’ படத்தில் அமிதாப்பச்சனுடன் முதன் முதலில் செக்ஸியாக நடித்தார். திரை உலகில் நிலைக்க கவர்ச்சிகாட்டியே ஆகவேண்டும் என்பதை முதலிலே உணர்ந்து, அதற்கு தக்கபடி செயல்படும் நடிகைகள் புத்திசாலிகளாகவும், தாமதமாக விழித்துக்கொள்ளும் நடிகைகள் அவ்வளவு புத்திசாலிகள் அல்ல என்ற கருத்தும்தான் நிலவிவருகிறது.

வித்யாபாலன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்கு வந்தார். ஆரம்பத்தில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்தார். பெயர் கிடைத்தது. ஆனால் அவர் எதிர்பார்த்ததுபோல முன்னணி இடம் கிடைக்கவில்லை. வேறுவழி இல்லாமல் ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்தார். இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். பல காலமாக அவர் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த நடிகையாக முடியவில்லை. பிறகு அவர் எடுத்த அதிரடியான செக்ஸி அவதாரம் அவரை பெரிய நட்சத்திரமாக்கி விட்டது.

அழகு, நடிப்புத் திறமை எல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்பதை உணர்ந்த நடிகைகள் பலர் திரை உலகில் பிரகாசிக்கிறார்கள். கதா நாயகர்களுக்கு கிடைக்கும் வெற்றி, கதாநாயகிகளுக்கு கிடைப்பதில்லை. ஆனால் நடிகர்கள் நடிப்பு, சண்டை, நடனம் போன்றவைகளில் தேர்ச்சி பெறவேண்டியதிருக்கிறது. நடிகைகள் கவர்ச்சி காட்டுவதில் மட்டும் தேறினால் போதுமானது.

பிபாசா பாசு ‘ஜிஸ்ம்’ என்ற படத்தில் அறிமுகமாகி செக்ஸியாக நடித்து தொடக்கத்திலேயே ‘தன் வழி கவர்ச்சி வழி’ என்று காட்டினார். தொடர்ந்து அவ்வாறே நடித்தார். மல்லிகா ஷெராவத், ‌ஷர்லின் சோப்ரா, ராக்கி சாவந்த், சன்னிலியோன் அனைவரும் அப்படித்தான். கவர்ச்சியை மூலதனமாக்கி கணிசமாக பணம் சம்பாதித்தார்கள்.

சன்னிலியோன் படத்தில் கதையே இருக்காது. முக்கிய வி‌ஷயம் எதுவுமிருக்காது. ஆனால் படம் ஓடும். பணத்தை சம்பாதித்தது மட்டுமல்ல, பெரும் பப்ளிசிட்டியையும் பெற்றுவிட்டார். அதனால் நடிப்பு மட்டுமின்றி, பல்வேறு டெலிவி‌ஷன் காட்சிகளிலும் தோன்றுகிறார். இப்போது நாலாபுறமும் இருந்து பணம் கொட்டிக்கொண்டிருக்கிறது. அவருடைய வலைத்தள செய்திகளையும், படங்களையும் பார்க்காதவர்களே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அத்தனை ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். அவர்கள் அனைவரும் அவர் நடிக்கும் சினிமாவையும் பார்த்துவிடுகிறார்கள்.

சினிமாவில் நெருக்கமான காட்சிகளே தவறு என்று நினைத்த காலத்திலேயே ராஜ்கபூர் தன் படங்களில் செக்ஸ் காட்சிகளைப் புகுத்தினார். பாபி, சங்கம், ராம்தேரி கங்கா மெய்லி, சத்யம் சிவம் சுந்தரம் போன்ற படங்களில் அதிரடியாக செக்ஸ் காட்சிகளைப் புகுத்தினார். மழைக் காட்சிகள் அவர் படங்களில் இடம்பெற்று பண மழையை கொட்டியது. அந்த அளவுக்கு மழையோடு நடிகைகளை நனையவைத்து அழகு காட்டினார். கூடவே நல்ல கதையம்சமும் இருந்தது. பாடல்கள், நடிப்பு எல்லாமும் கலந்திருந்தது. ரசிகர்களுக்கு என்ன தேவை என்பது அந்த காலத்திலேயே அவருக்கு தெரிந்திருந்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>