கல்விக்காக தினமும் ரூ.200 செலவு செய்யும் மலை கிராம மாணவிகள்

தனியார் விடுதியில் தங்கி தினமும் ரூ.200 செலவு செய்து அரசுப் பள்ளியில் பயிலும் தங்களை அரசு விடுதியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொல்லிமலை மலை கிராம மாணவிகள் கோரிக்கை

ஆட்சியரிடம் மனு அளித்த மாணவிகள்.கொல்லிமலை சித்தூர்நாடு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.நிகழ் கல்வி ஆண்டில்தான் மாணவிகளும் ராசிபுரத்தில் அரசு மாணவிகள் விடுதியில் இடம் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளனர். மாணவிகளுக்கு விடுதியில் சேர்க்கை அளிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து மாணவிகள் 50 பேரும் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, மனு அளித்தனர்.அந்த மனுவில், அரசு விடுதியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பள்ளியில் சேர்ந்துவிட்டதாகவும், இதனால் கடந்த 2 மாதங்களாக தினமும் ரூ.200 செலவு செய்து ராசிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பள்ளிக்குச் சென்று வருவதாகவும், விவசாயம் செய்து வரும் பெற்றோரால் தினமும் ரூ.200 செலவு செய்ய முடியாத நிலை உள்ளதால், ராசிபுரத்தில் அரசு மாணவிகள் விடுதியில் சேர்க்கை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>