கலைஞர் மீதான அவதூறு வழக்குகள் ரத்து

மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
karunanidhi_650x400_71461443814

சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்க தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு அவை செயல்பட்டு வரும் நிலையில்,

சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் உள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது..

இந்த நிலையில், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இன்று அதன் மீதான விசாரணை நடைபெற்றது..

அப்போது தி. மு.க தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கருணாநிதி மரணம் அடைந்து விட்டதால் அவர் மீதான அவதூறு வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என கோரி, முறைப்படி அவரின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்தனர்,

அதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.சாந்தி, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி மீதான அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>