கர்நாடக அரசைக் கண்டித்து நடந்த பேரணியில் தீக்குளித்து மாண்டு போன விக்னேஷ்க்கு இரங்கல் திமுக.தலைவர் மு.கருணாநிதி

400x400_image57952766

கர்நாடக அரசைக் கண்டித்து நடந்த பேரணியில் தீக்குளித்து மாண்டு போன விக்னேஷ்க்கு இரங்கல் !

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, நடத்தப்பட்ட பேரணி ஒன்றில் கலந்து கொண்ட மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் தீக்குளித்து மாண்ட செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். எவ்வளவு தீவிரமான பிரச்சினை ஆனாலும், அதற்காக உயிரோடு இருந்து வாழ்நாள் முழுதும் போராட வேண்டுமே தவிர, உயிரை மாய்த்துக் கொள்வதென்பது சோகமயமானதும், ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும். இன்றைய இளைஞர்கள் இதனை உணர்ந்து தங்களுடைய இத்தகைய போராட்ட வழிமுறைகளை வகுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தீக்குளித்து மாண்ட விக்னேஷ் குடும்பத்தாருக்கும், உறவினர் களுக்கும், என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>