கர்நாடகாவுக்குள் தமிழக லாரிகள் செல்ல நடவடிக்கை எடுக்க கோரி லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்

2016-22-9-13-54-50ty

நாமக்கல்: தமிழக லாரிகளை கர்நாடக மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகம்-கர்நாடக எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே 11-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் கர்நாடகாவிற்கு செல்லும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 100 கோடி வருவாய் இழப்பும், ரூ.1,500 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனவே தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடகாவுக்குள் தமிழக லாரிகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் 200 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>