கர்நாடகாவில் துணை ராணுவப் படையினர் குவிப்பு : அசம்பாவிதங்களை தவிர்க்க கொடி அணிவகுப்பு

துணை ராணுவ படையினர் கர்நாடகாவிற்கு விரைந்துள்ளனர். தேவைப்பட்டால் பெங்களூருவிலும் துணை ராணுவப் படையினர் களமிறக்கப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணை ராணுவ படையினர் கர்நாடகாவிற்கு விரைந்துள்ளனர். தேவைப்பட்டால் பெங்களூருவிலும் துணை ராணுவப் படையினர் களமிறக்கப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு: பெங்களூருவில் பதற்றம் நிறைந்த 16 இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தமிழக பதிவெண் வாகனங்களும், கார்களும் மற்றும் தனியாருக்கு சொந்தமான பேருந்துகளும் நேற்று வன்முறை கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் எலக்ட்ரானிக் சிட்டியில் தமிழக பதிவெண் கொண்ட லாரிக்கு தீ வைக்கட்டதால் லாரியிலிருந்து ஓடி தப்பித்து அதன் டிரைவர் உயிரை காப்பாற்றிக் கொண்டார். பெங்களூருவில் ஒரு இடத்தில் தமிழர் நடத்தும் கடைக்கு தீ வைக்கப்பட்டது. விஜயாநகரில் தமிழகத்தை சேர்ந்த ஒரு கார் கன்னட அமைப்பி்னரால் அடித்து நொறுக்கப்பட்டது. இதனிடையே மைசூருவில் அமைதியை ஏற்படுத்த 5 கம்பெனி துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் துணை ராணுவ படையினர் கர்நாடகாவிற்கு விரைந்துள்ளனர். தேவைப்பட்டால் பெங்களூருவிலும் துணை ராணுவப் படையினர் களமிறக்கப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>