கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது

daily_news_7004619836808

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து வன்முறையில் இறங்கிய கன்னடர்கள் தமிழர்களை தாக்கினர். தமிழக வாகனங்களையும் அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. ஏராளமான தமிழர்களும் தாக்குதலில் காயமடைந்தனர். இந்த வன்முமறை வெறியாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை எழும்பூரில் திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. எழும்பூர் ரயில் மறியலில் சென்னை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 5000 பேர் பங்கேற்றனர். அப்போது கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷமிட்டனர். ரயில் மறியலில் ஈடுபட ராதாகிருஷ்ணன் அரங்கத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற ஸ்டாலின் உட்பட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>