கர்நாடகாவில் குடிநீருக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் போது தமிழகத்திற்கு தண்ணீரா?: எடியூரப்பா

கர்நாடகாவில் குடிநீருக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் போது தமிழகத்திற்கு தண்ணீரா?: எடியூரப்பா

கர்நாடகாவில் குடிநீருக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் போது தமிழகத்திற்கு தண்ணீரா?: எடியூரப்பா

பெங்களூரு: காவிரியில் தண்ணீரை திறந்துவிடும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்து அன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கர்நாடக அரசு விவாதிக்க உள்ளது. இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கர்நாடகாவில் பாசனத்திற்காக மட்டுமின்றி குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை உள்ளதாக கூறியுள்ளார். இன்று மாலை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் கர்நாடகாவில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காவிரியில் 50 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கப்படும் என்று சித்தராமையா கூறியிருப்பதன் மூலம் தமிழகத்திற்கு கர்நாடகம் உடனடியாக தண்ணீரை திறந்துவிட வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது. காவிரி கண்காணிப்புக் குழுவை அணுக 3 நாள் அவகாசம் இருப்பதால் அக்குழுவில் முறையிட கர்நாடகம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>