கர்நாடகாவில் கழிவுநீர் கலக்கும் விவகாரம் காவிரியில் மாசு ஆய்வுக்கு கூட்டுக்குழு அமைப்பு: 15ம் தேதி பணிகள் துவக்கம்

cauvery_2999910f

புதுடெல்லி : கர்நாடகாவில் காவிரி நீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் விதமாக உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இரு மாநில அதிகாரிகள் அடங்கிய ஒரு புதிய கூட்டுக்குழுவை அமைத்துள்ளது. காவிரி நீரில், கர்நாடகாவில் கழிவுநீர் கலப்பதாக தமிழக அரசால் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது. அதில் காவிரியில் கழிவுநீர் கலப்பதால் அதை சுத்திகரிப்பதற்காக ஆகும் செலவிற்கு இழப்பீடு தொகை கேட்டு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காவிரி நீரை ஆய்வு செய்து 6 மாதத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், காவிரியில் கழிவுநீர் கலப்பதால், மக்களுக்கும் சுற்றுச்சுழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளையும் அந்த அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் காவிரி நீரில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகளுடன் தமிழகம் மற்றும் கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேற்று டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் தீவிர ஆலோசன நடத்தினர். இறுதியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஒரு கூட்டுக்குழு உருவாக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், “காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஒரு புதிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது மத்திய மாசு கட்டுப்பாட்டு அதிகாரி பரத்வாஜ் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளும். இதுகுறித்த ஆய்வானது வரும் 15ம் தேதி முதல் தொடங்கப்படும். மேலும் இந்த குழு ஆய்வின் போது தமிழகம் மற்றும் கர்நாடகாவின் இரு மாநில மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் உடன் இருப்பார்கள். காவிரி நீரின் மாதிரியையும் இந்த கூட்டுக்குழுவில் உள்ள அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேற்று தெரிவித்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>