கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் போய் பிஜேபி கர்நாடக மக்களுக்கு சேவை செய்து பிடிக்கட்டும். ஜோதிமணி வலை விளையாட்டு

Jothimani Sennimalai
1 ம.நே. ·

_91180748_160913kpn69
நேற்று கலவரக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு, கர்நாடகா முதல்வர் தான் அரசியல் சாசனக் கடமையை செய்ததற்காக பிஜேபி வன்முறையில் ஈடுபடுகிறது என்று மோடியிடம் நேரடிக் குற்றச்சாட்டு, இன்று கர்நாடகா உள்துறை அமைச்சர் கலவரத்தை தூண்டும் தலைவர்களையும் கைதுசெய்யத் தயங்கமாட்டோம் என்று கடுமையான எச்சரிக்கை செய்த பிறகு பெங்களூரில் நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது.
கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் போய் பிஜேபி கர்நாடக மக்களுக்கு சேவை செய்து பிடிக்கட்டும். அது நேர்மையான அணுகுமுறை . தமிழர்கள் மீது வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டுத் தான் அதைச் செய்யவேண்டும் என்று நினைப்பது அரக்கத்தனம்.
கர்நாடகத்தில் அடித்தால் தமிழ்நாட்டிலும் கன்னடர்களைத் திருப்பி அடிப்பார்கள்.இரண்டு மாநிலங்களும் பற்றி எரிந்தால் குளிர்காயலாம் என்ற நினைப்பு.
நல்லவேளையாக தமிழகம் அமைதி காத்தது. கன்னடரைத் தாக்கிய குண்டர்களை உறுதியோடு நின்று கண்டித்தது. தாமதமானாலும் கர்நாடகா உண்மையான கலவரக்காரர்களை இனம் கண்டு கொண்டது. இல்லாவிட்டால் நிலைமை என்னவாகியிருக்கும்? பெங்களூரில் மட்டும் 15லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
உத்திரப்பிரதேசம்,மகாராஷ்டிரா, குஜராத் , என்ற கலவரவரிசையில் கர்நாடாகாவையும் சேர்க்கச் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டிருப்பது ஆறுதல். இன்னும் அரசு கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.அவர்கள் வரலாறு அப்படி.
எடியூரப்பா,சதானந்த கௌடா இரு பிஜேபியின் முன்னாள் முதல்வர்கள் தமிழ்நாட்டில் அடித்ததால் திருப்பி அடித்தோம் என்று வெட்கமில்லாமல் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். இந்த லட்சணத்தில் சதானந்த கௌடா மத்திய சட்ட அமைச்சர் வேறு. இங்கு என்ன கன்னடர்களுக்கு எதிராக வன்முறையா நடந்தது? நடந்த இரண்டு தவறுகளுக்கே தமிழ்நாடு எழுந்து நின்று தடுத்தது. எப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார்கள்!
உண்மையைச் சொன்னால் ,இங்கே வந்து நீங்கள் அரசியல் செய்கிறீர்கள் என்று பிஜேபி ஆதரவாளர்கள் பொங்கவேண்டியது.எனக்கு அப்படிப்பட்ட அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நான் களத்தில் அரசியல் செய்து பழக்கப்பட்டவள். கலவரத்தில் அல்ல. இப்போது மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்?
சித்தராமையா நேரடியாகக் குற்றம்சாட்டும்வரையில், கலவரத்தை கைகட்டி வாய்மூடி வேடிக்கை பார்க்கிறார் மோடி. கர்நாடக உள்துறை அமைச்சர் கலவரத்தைத் தூண்டும் தலைவர்களை கைது செய்யத் தயங்கமாட்டோம் என்றதும் மெல்ல அமைதியின் தூது வருகிறது. தமிழகத்தில் மோடியின்மீது காட்டமான விமர்ச்சனங்கள் எழுந்ததும் ஊடகங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வருகிறது.
மாட்டுக்கறி,பசு, தண்ணீர் என்று எந்தப் பிரச்சினையிலும் கலவரம் செய்ய அலைகிறவர்களை நாம் இனம் கண்டு கொள்ளவேண்டும். தாட்சண்யம் பார்க்காமல் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களின் உயிரும்,உடைமைகளும் தான்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>