கருணாநிதி நலமுடன் உள்ளார்: ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.thirichi siva-MK - jakkamma

இதைத் தொடர்ந்து கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, க.அன்பழகன், திருச்சி சிவா. ஆ.ராசா உள்ளிட்டோர் கோபாலபுரம் இல்லம் சென்று சந்தித்தனர்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆற்காடு வீராசாமி, ”தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை பரப்பவோ, நம்பவோ வேண்டாம்” என்றார்.

ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளைப் பரப்பியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>