கபாலி படம் தொடர்பாக தொடரப்பட்டவழக்கை உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்து

 கபாலி படம்  தொடர்பாக தொடரப்பட்டவழக்கை உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்து

கபாலி படம் தொடர்பாக தொடரப்பட்டவழக்கை உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்து

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை என்று தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் செம்பியம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அது தொடர்பான மனுவில், ‘தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் தொகையை படம் பார்க்க வரும் ரசிகர், பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று, பொது நல வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த மார்ச்சில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்மையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் வெளியானது. இந்த படத்தை பார்க்க வந்த ரசிகர்களிடமும் பெரும் தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது.

மேலும் திரையரங்கு நிர்வாகம் அதிக கட்டணம் வசூலித்தால், அது குறித்து புகார் செய்ய வசதியாக இலவச தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திரையரங்குகளிலும் திடீரென சென்று சோதனை நடத்துவதற்கு அதிகாரிகளை கொண்ட பறக்கும் படையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>