கன்னியாகுமரி மக்களுக்கு சென்னையில் இருந்து நிவாரண பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் அனுப்பியது

201712030235039077_Kanyakumari-people-Relief-supplies-The-Red-Cross-was-sent_SECVPF

ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு செய்து வருகிறது. இதேபோல், இந்திய செஞ்சிலுவை சங்கம், செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் நிறுவனம் உள்பட பல்வேறு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் இந்திய செஞ்சிலுவை சங்கம் (தமிழ்நாடு கிளை) சார்பில் நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கம் தலைமையகத்தில் இருந்து நேற்று காலை கன்டெய்னர் லாரியில் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. படுக்கை விரிப்பு, போர்வை, வேட்டி, சேலை, கொசுவலை, டி–சர்ட், தார்பாய், வாளி, பருத்தி துண்டு ஆகியவை தலா ஆயிரம் எண்ணிக்கையில் அனுப்பப்பட்டன.

இதற்கான அனைத்து பணிகளையும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் துணைத்தலைவர் வடிவேல் முகுந்தன், அட்மினிஸ்டேட்டர் நீதிபதி ஏ.குலசேகரன் பார்வையிட்டனர்.

கன்னியாகுமரி பகுதியில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் நிவாரண பொருட்களை வழங்க இருக்கின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>