கனவு ஆசிரியன்:பிரபஞ்சன்

நான் பட்ட கடனை அவர்கள் திருப்பிக் கேட்க மாட்டார்கள். அது அவர்களுடைய பெருந்தன்மை. விலை மதிப்பற்ற செல்வத்தையும் கொடுத்து, பெற்றவர்கள் உயர்வதையே - வரு பொருளாகக் கொண்டு வாழ்கிற கொடைத் தொழில் ஆசிரியர் பணி ஒன்றேயாகும்.

நான் பட்ட கடனை அவர்கள் திருப்பிக் கேட்க மாட்டார்கள். அது அவர்களுடைய பெருந்தன்மை. விலை மதிப்பற்ற செல்வத்தையும் கொடுத்து, பெற்றவர்கள் உயர்வதையே – வரு பொருளாகக் கொண்டு வாழ்கிற கொடைத் தொழில் ஆசிரியர் பணி ஒன்றேயாகும்.

ஐயா நான் தங்களுக்குக் கடன் பட்டவன்
சுமார் நூறு ஆசிரியர்கள், என்னை உருவாக்கி இருக்கிறார்கள். அதாவது அந்த நூறு ஆசான்களுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நான் பட்ட கடனை அவர்கள் திருப்பிக் கேட்க மாட்டார்கள். அது அவர்களுடைய பெருந்தன்மை. விலை மதிப்பற்ற செல்வத்தையும் கொடுத்து, பெற்றவர்கள் உயர்வதையே – வரு பொருளாகக் கொண்டு வாழ்கிற கொடைத் தொழில் ஆசிரியர் பணி ஒன்றேயாகும். அவர்கள் செய்வது தொழில் அன்று. அது பணி அல்லது தொண்டு. அவர்கள் பெறுவது சம்பளம் அல்ல. அது சன்மானம்.

பள்ளி, கல்லூரி, பல்கலைகள் என்று ஒரு நூறு ஆசிரியர்களைக் கடந்து நான் வந்திருக்கிறேன். நானே நான்கு ஆண்டுகள் ஆசிரியனாகப் பணி செய்திருக்கிறேன். உலகம் முழுவதும் ஆசிரியர்ப்பணி செய்யும் பலப்பலரை நான் நண்பர்களாகப் பெற்றிருக்கும் பேறு பெற்றுள்ளேன்.

Logo AA

இன்று நான் எழுதும் மொழிக்கும், சிந்தனைக்கும் அந்த மேலான ஆசிரியர் பெருமக்களே காரணம் என்கிற நன்றியுடன் கூடிய புரிதல் எனக்குண்டு.

ஒரு நூறு ஆசிரியர்களுக்கு முன் மாணவனாக இருந்து நான் கற்றிருந்தாலும், வெகு சிலர் மட்டுமே என் ஆத்மாவுக்குள் இருந்து என்னை வழி நடத்துகிறார்கள்.

இது ஏன்? பலர் பெயரும் முகமும் கூட மறந்து போன பின்பும், அந்தச் சிலர் மட்டும் நான் வழிபடும் மனிதர்களாக நீடித்து இருக்க என்ன காரணம்? அந்தச் சிலர் மட்டும்தான் “சரியான” ஆசிரியர்கள் என்பதே காரணம்.

ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற என் எதிர்பார்ப்பை, அந்தச் சிலரைக்கொண்டே நிறுவலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு குழந்தையின் பேதமை அல்லது குழந்தைமை எப்போது அந்தக் குழந்தையிடமிருந்து விடை பெறுகிறது. ஆசிரியர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய கேள்வி இது.

புத்தகப் பக்கங்களின் மத்தியில் தான் வைத்த மயிலிறகு குட்டி போடாது என்று எப்போது ஒரு குழந்தை புரிந்து கொள்கிறதோ, அந்தக்கணம் அந்தக் குழந்தை தன் குழந்தைமையிலிருந்து விழித்துக் கொள்கிறது. ஒரு குழந்தை சந்திக்கும் ஆகப்பெரிய இழப்பு அதுதான், சோகமும் அதுதான்.

அக்குழந்தை மிக நேர்த்தியாக தன் துன்பத்தை மற்றவர் கண்களிலிருந்து மறைத்துவிடுகிறது. ஆனால், அதன் மனதுக்குள் ரத்தம் வடியவே செய்கிறது.

இயற்கை, மழையை அனுப்புவது போல, பூக்களை மலரச் செய்வது போல, குழந்தையின் குழந்தைமையையும் எடுத்துக் கொள்கிறது. இது அவசியம்; இயற்கை தன் கடமையைச் சரியாகவே செய்கிறது.

குழந்தை, சிறுவனாகவோ, சிறுமியாகவோ வளர்வது என்பது வைகறை காலை ஆவது போல மிக இயல்புதான். ஆகாவிடில்; குழந்தையின் வளர்ச்சி, வளர்ச்சி இன்மை என்றே கருதப்படும்.

01-1380607375-school-students3-600ம

இயற்கை அவசர புத்தி உடையதும், எரிச்சல் கொண்டதுமான திருவுரு. அதற்கு குழந்தையைப் பதின்ம வயதினராக (Teen age) ஆக்கிவிடும் அவசரம். இயற்கை காயம் படுவதில்லை/ மனித குலத்துக்கே காயம் உரியது. குழந்தை, சிறார்ப் பருவத்தில் பெரிய இழப்புடனேயே நுழைகிறது. அந்த இழப்பு, இட்டு நிரப்பக் கூடியது.

குழந்தையிடமிருந்து குழந்தைமையை எடுத்துக் கொள்ளும் போதே, அவன் அவள் கண்களில் பட்டாம்பூச்சிகளைப் படர விடுகிறது. பல வண்ணக் காற்றாடிகள் தம் கண்கள் முன் பறப்பதை அக்குழந்தைகள் காண்கின்றனர்.

மத்தாப்புகளைக் கொளுத்துகிறது, கண்களை மேடுகளில் இருந்து பள்ளத்தாக்குகளில், கடலிலிருந்து பாலை நிலத்துக்குக் கொண்டு செல்வதன் மூலம்; குழந்தைகளின் இழப்பின் காயங்களை ஆற்றி விடுகிறது.

ஆனால் வெற்றிடம், வெற்றிடமாகவே இருக்கிறது அதை இட்டு நிரப்பும் இரண்டாவது ஆசிரியர்; ஆசிரியராகவே இருக்கிறார். இயற்கையின் இனிய பிரதிநிதியே ஆசிரியர்ப் பெருமக்கள்.

மாணவர்களின் முதல் முன்மாதிரி, அல்லது வீரயுகத் தலைவர் (ஹீரோ) ஆசிரியர்கள்தாம். சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் என்று நாம் நினைக்கிறோம். அது தவறு. முதல் முதலாக மாணவர்கள் மனதில் எழுந்து நிலைப்பது ஆசிரிய ஆசிரியைகளே ஆவர்.

அவர்கள் ஆடை, ஆடை அணியும் விதம், பேச்சு பாணி, உடல் மொழி, எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் கண்களில் வழியும் அன்பு, எப்பொழுதும் என்னை அணுகலாம் என்கிற அவர்களின் இயல்புத்தன்மை இவைகளே மாணவர்களை ஆசிரியர்களை நோக்கி வரச் செய்கின்றன.

நான படித்த பள்ளியில் ரெஜிஸ், அலோசிஸ் என்று இரண்டு ஆசிரியர்கள். ஒருவர் கணக்கு, ஒருவர் ஆங்கிலம். நான் ரெஜிஸ் மாணவன். அற்புதமான ஆசிரியர் அவர். எந்த கல்லுக்கும், குன்றுக்கும், பாறைக்கும் கணக்குப் புகட்டுவதில் நிபுணர் அவர் என்று பெற்றோர்கள் பேசிக் கொள்வார்கள். அவரே என்னிடம் தோற்றார். காரணம் அவரல்ல. நான். என் மனசுக்குள் இருந்த மனத்தடை.

விஷயம் அதுவல்ல. அவர் உடுத்திய ஆடைகளின் நேர்த்தி என்னை மிகவும் கவர்ந்தது. எல்லோரையும் போலத்தான் பேண்ட்டும், உள்ளிட்ட சட்டையும் அவர் அணிந்தார்; துளி அழுக்கு இல்லாத உடை. சமகாலத்தன்மை கொண்ட பாணியில் தான் உடுத்துவார். நாங்கள், நியூஸ் பேப்பரை மடித்துத் தைத்தாற்போல புதிய மோஸ்தர் சட்டைகளைப் போட்டுக் கொண்டு திரிந்தோம்.

‘ஆவாரா’ என்கிற ராஜ்கபூர் படத்திலிருந்து மோஸ்தர் உருவானதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். என் அப்பா என் முதுகுப் பக்கமிருந்து சட்டையைப் பேப்பர் படிக்கிறதாக நடித்து என்னைக் கேலி செய்தார். ஆனால் ரெஜிஸ் சாரின் ஆடைகள் மிகவும் கண்ணியமானதாக இருக்கும்.

ள்ள்

இன்று அணிந்ததை நாளை அணியமாட்டார். மனிதரை முதல் பார்வையில் அறிமுகப்படுத்தும் முதல் குறிப்பு அவரது ஆடையாகவே இருக்கிறது. என் ஆடை அணி அழகாகவும் பொருத்தமாகவும் இருப்பதாக நண்பர்கள் சொல்வார்கள், இது உண்மையென்றால் அதுக்குக் காரணம் எங்கள் ஆசிரியர் ரெஜிஸ் சார்தான்.

அழுக்கு மூட்டையாகப் பள்ளிக்கூடம் வரும்ஆசிரியர்கள் எனக்கும் இருந்தார்கள். அவர்களிடம் அறிவு இருக்கலாம். ஆனால் அது ஆபாசமான அறிவு.

மேடைப் பேச்சுப் போட்டியில் பெயரைக் கொடுத்துவிட்டு நான் திகைத்து நிற்கையில், என் ஆசிரியர் ஒருவர் சொன்னார். ‘முன்னால் இருப்பவனெல்லாம் முட்டாள்கள்; என்று நினைத்துக் கொண்டு அடிச்சு விட்ரா’ என்றார் அவர். அவர் எனக்குச் சொன்ன அத்தனை போதனைகளிலும் மிக மோசமானது இந்த அறிவுரைதான்.

முட்டாளாக இருக்கிற முட்டாள்களுக்கு முட்டாள் மட்டுமே தானே பேச முடியும்? முன்னால் இருக்கிறவர், நம்மோடு இருக்கிறவர்கள் அறிவாளிகள் என்று நினைக்கிறவர்களுக்கு அல்லவா அறிவுப் பேறு வாய்க்கும்; மக்கள் யார்தான் மூடர்?; யார்தான் அனைத்தும அறிந்தார்? எறும்பும் தன் காலால் எண் சாண் இல்லையா? ஆசிரியர்கள்; உலகை ஞான மயம் என்று தம் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்விக்க வேண்டும் அல்லவா? என் தமிழ் ஆசிரியர் திருநாவுக்கரசு சொல்வார்.

‘நூலகத்துக்குப் போட நாம் எவ்வளவு மூடர் என்று அது சொல்லும். கூடவே, எத்தனை அறிஞர்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் சொல்லும். நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். உலகம் படிக்கக் காத்திருக்கும் அந்த மேதைகள் வரிசையில் நீ இருக்கப் போகிறாயா என்று கேட்கும். நீ தைரியமாகச் சொல்ல வேண்டும். ‘ஆம்’ நான் இருப்பேன் உலகம் என்னைக் கற்கும் நாள் ஒன்று வரும்’ என்று சொல்ல முடியும் என்றால் உன் வாழ்க்கை அடர்த்தி கொண்டது என்று பொருள்.

கனவு வளரும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>