கதிராமங்கலம் கடையடைப்பு

0a7fb495-a400-43a0-a16e-782c44d89ce4_13021_07424

கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சியைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி, 10-வது நாளாக கடையடைப்புப் போராட்டம் தொடர்கிறது.

கதிராமங்கலம் கடையடைப்பு

கடந்த 30-ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்த குழாயிலிருந்து எண்ணெய்க்கசிவு ஏற்பட்டது. ஏற்கெனவே, இந்தத் திட்டத்தை எதிர்த்துவரும் நிலையில், பதற்றம் அடைந்த மக்கள், மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். தகவலறிந்து வந்த போலீஸார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதால், அந்தப் பகுதி கலவரப் பகுதியாக மாறியது. இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது, வழக்குப்பதிவு செய்து, அவர்களை திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, கதிராமங்கலத்தில் கடையடைப்புப் போராட்டம் தொடங்கியது. இன்று, 10-வது நாளாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், இன்று கதிராமங்கலம் மக்களைச் சந்திக்க வைகோ, பழ.நெடுமாறன், முத்தரசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் செல்கின்றனர். இதனிடையே,ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, நெடுவாசலில் 90-வது நாளாகப் போராட்டம் தொடர்கிறது. டெல்டா பகுதி நிலங்களைக் காக்க, இரு கிராமங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>