கதிராமங்கலத்தில் போராட்டம் தொடர்கிறது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலத்தில் ONGC நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட எந்த எரிவாயு எடுப்புத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
kathiramangala_jakkamma
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலத்தில் ONGC நிறுவனத்தின்
எண்ணெய் கிணறு கடந்த 2002ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்படும் எண்ணெய் குழாய்கள் மூலம் குத்தாலத்தில் உள்ள மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த எண்ணெய் கிணற்றால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிடைக்கும் தண்ணீரும் மாசடைந்து விட்டதாக அப்பகுதி மக்கள் சொல்கின்றனர்.

இத்தகைய சூழலில் கதிராமங்கலம் எண்ணெய் கிணற்றை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள ONGC கடந்த மாதம் 17ம் தேதி முயற்சி எடுத்தது.
Ongc_jakkamma
ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுப்பிக்கும் பணியை கைவிட வேண்டும், எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் கடந்த 19ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த 25, 27 தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தீர்வு எட்டப்படாத நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 2ம் தேதி புதுப்பிப்பு தொடங்கி, 5ம் தேதி வரை நடைபெற்றது.

இதைக்கண்டித்து போராட்டம் நடத்திய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கதிராமங்கலம் பகுதிக்கு வரும் தலைவர்களை, போராட்டத்திற்கு ஆதரவளிப்போரையும் ஊருக்குள் அனுமதிக்கவில்லை.
kathiramangalam_jaya_jakkamma
இதைக்கண்டித்தும் வீடுகளில் கருப்புக் கொடிகளைக் கிராம மக்கள் கட்டியுள்ளனர். விவசாயத்தைக் கெடுக்கும் ONGC எண்ணெய் கிணற்றை நிரந்தமாக மூட வேண்டும். கைது செய்யப்பட்ட 11 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். கிராமத்தைவிட்டு போலீசார் வெளியேற வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கதிராமங்கலத்தில் ONGC எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க சென்ற தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனை போலீசார் வழியில் தடுத்து கைது செய்துள்ளனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>