கணவன் மனைவி சண்டையில் குழந்தையை சூடான தாவாவில் நிற்கவைத்த தாய்

201712041300214064_Hyderabad-4yearold-girl-made-to-sit-on-hot-frying-pan-by_SECVPF
ஐதராபாத்

ஞாயிற்றுக்கிழமை காலை, ஒரு ஜோடி நம்பிலாவிலுள்ள பாரோசா மையத்தை அணுகினர். அவர்கள் ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் ஒரு சிறுமியை கண்டுபிடித்ததாகவும், அவளை தத்தெடுக்க விரும்புவதாகவும் கூறினார், ஆனால் இந்த குழந்தை எங்களுடன் இருக்க விரும்பவில்லை என கூறினர்.

ஆனால் அதிகாரிகள் அந்த கதையை நம்பவில்லை. அந்த ஜோடியிடம் விசாரணை நடத்தினர். இறுதியில் அந்த பெண் உண்மையை ஒத்து கொண்டார். அந்த சிறுமி தன்னுடைய மகள் என்றும் ஆனால் அவள் எங்களுடன் இருக்க விரும்பவில்லை என்றும் கூறினாள்.

இதைதொடர்ந்து பாரோசா மைய அதிகாரிகள் குழந்தைகள் உதவி மையத்திற்கும் எஸ் ஆர் நகர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியின் தாயார் பெயர் லலிதா என்றும் அவரது சொந்த ஊர் ஸ்ரீகாகுளம் ஆகும். இவர் தனது கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளகாதலன் பிரகாஷை திருமணம் செய்து உள்ளார்.

பின்னர் இந்த ஜோடி ஒரு 4 வயது குழந்தையுடன் கடந்த மாதம் ஐதராபாத் வந்து உள்ளது. இவர்கள் இருவரும் எஸ் ஆர் நகரில் ஒரு ஹாஸ்டலில் வேலை பார்த்து வந்து உள்ளனர். அதே பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

பிரகாஷ் குழந்தை தன்னுடன் இருப்பதை எதிர்த்து உள்ளார். தொடர்ந்து அவர் குழைதையை விட்டு விடும் படி லலிதாவை துன்புறுத்தி வந்து உள்ளார். 3 நாட்களுக்கு முன் லலிதா குழந்தையை சூடான் தாவாவில் உட்கார வைத்து கொடுமை செய்து உள்ளார். இதில் 4 வயது குழந்தையின் கால் வெந்து போய் உள்ளது.

இது குறித்து லலிதா கூறும் போது லேப்டாப்பை உடைத்ததால் குழந்தையை அடித்ததாக கூறினார். பின்னர் தாவாவில் விழுந்து விட்டதாக கூறி உள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>