கணபதி விழாவும்… தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கமும்

முதல் கடவுள் என்று கூறும் ஸ்ரீகணேசர் பெருமானை இந்துக்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கூட கடவுளை வழிபடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. தாராவியிலும் தமிழ் இன மக்களால் கொண்டாடப்பட்டது.

முதல் கடவுள் என்று கூறும் ஸ்ரீகணேசர் பெருமானை இந்துக்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கூட கடவுளை வழிபடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. தாராவியிலும் தமிழ் இன மக்களால் கொண்டாடப்பட்டது.

தாராவி: இன்று மும்பையில் மட்டுமல்லாது உலகமெங்கும் கொண்டாடப்படும் ஸ்ரீ கணபதி விழா என்பது பாலகங்காதர திலகரால் மக்கள் எல்லோரும் ஒரு முகமாக சேர்ந்து கொண்டாடப்பட வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. முதல் கடவுள் என்று கூறும் ஸ்ரீகணேசர் பெருமானை இந்துக்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கூட கடவுளை வழிபடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. தாராவியிலும் தமிழ் இன மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த கணபதி விழா பின்னர் பல பிரிவுகளாக பிரிந்த சமயத்தில் 1950-1955 களில் பசும்பொன் தேவர் நகரில் சமுதாயத்திற்கு என்று ஒரு மண்டல் வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது.

1950 களில் பெரிய பெரிய மில்களிலும் பெரிய கம்பெனிகளிலும் ரயில்வே நிர்வாகத்திலும் கூட சம்பளம் 25 ரூபாய் அல்லது 30 ரூபாய் தான். அந்த நேரத்தில் குடும்ப செலவு போக மீதி இருக்கும் 5 ரூபாய், பத்து ரூபாய்களை கொண்டு ஒவ்வோருவரும் இரண்டு, மூன்று ரூபாய் அன்பளிப்பு பெற்று தேவர் நகரில் தமிழகத்தில் இருந்து பிழைப்பு தேடி வந்தவர்கள் கணபதி விழா நடத்த வேண்டும என்கிற தீர்க்க முடிவால் ஆரம்பமானது.தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கம் சார்பில் இப்போது 60 வது ஆண்டு கணபதி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. உ.மு. தேவர் நகரில் மந்திர பாண்டி, சொல்விளக்கு, செண்பகம் மற்றும் பலர் ஆரம்பித்த இந்த கணபதி விழா மூன்று தலைமுறைகளையும் தான்டி 4வது தலை முறையும் கொண்டாடி வருகிறது. மந்திரபாண்டி, சொல்விளக்கு, செண்பகம் மற்றும் பெரியோர்கள் சேர்ந்து முதல்முறையாக இந்த கணபதி விழாவை தொடங்கினார்கள்.

வயது மூப்பு காரணமாக இந்த கணபதி விழாவினை யார் நடத்துவது என்று எண்ணி கொண்டு இருந்தபோது செங்குளம் சிவன்பாண்டி, மதவகுறிச்சி கருப்பன், சேரன்மகாதேவி சிதம்பரம், போன்றவர்கள் ஆலோசனை மட்டும் தாருங்கள் நாங்கள் உழைக்கிறோம் என்று தாமாக முன்வந்தார்கள். காலி நிலத்தில் கணபதி சிலையை வைத்து வழிபடுவதற்கு பல முன்னோர்கள் போராடி உள்ளனர்.கருப்பன், சிவன்பாண்டி இவர்களுடன் துடிப்பான இளைஞர்களாக அமரர் பி.எஸ் கந்தசாமி, காடான்குளத்தை சேர்ந்த பாடி, எஸ்.வி பதி இருந்து செயல்பட்டார்கள். மேலும் வல்லநாடு வேலு, நாஞ்சான்குளம் வேலு, சிறியந்துர் மாடசாமி, கே.பி பிச்சையா போன்றவர்கள் ஒரு சங்கம் வேண்டும் என்று ஆர்வப்பட்டு டி.எஸ் செல்லையா போன்றவர்கள் தாராவி பி.இ. சாலில் தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.

பி.எஸ் கந்தசாமி, கே.பி. பிச்சையா, எஸ். வேலு டி.எம் வேலு பாபு, எஸ். சுப்பையா ஆகியோர் ஒருசிறிய ஆலயத்தை உருவாக்கினார்கள். எஸ். வேலு தாயகத்தில் இருந்து பம்பாய் வந்தபோது கண்பதி சிலையை அரிசி மூட்டைக்குள் வைத்து கொண்டு வந்து சேர்த்தார். கணபதி விழாவை ஒரு நிர்வாகமும், தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கத்தை ஒரு நிர்வாகமும் நடத்தி வந்த வேளையில் ஒரு இன மக்களிடம் இரு நிர்வாகம் வேண்டாம் என்கிற தார்மீக அடிப்படையில் ஒரே நிர்வாகத்தினர் நிர்வகிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த வகையில் தளவாரம் சுப்பையா பல வருடம் இந்த சங்கத்தின் தலைவராகவும், பொது செயலாளராக சாத்தான் குளம் பி.இசக்கி பாண்டியனும், இருந்தனர். அதன் பின் பி.எஸ் கந்தசாமி, தலைவராகவும், பி.என். வானாமலை பொது செயலாளராகவும் இருந்தனர். அதனை தொடர்ந்து கே.பி பிச்சையா தலைவராகவும், பி.எஸ் சாமியின்இளைய சகோதரர் பி.எஸ் மாரிசாமி தலைவராக இருந்தார். அதன்பின் மதவக்குறிச்சி எம். பண்டாரம், ஆர். கொம்பையா, சங்கத்திற்கும், ஆலயத்திற்கும் தலைவராகவும் தர்மகர்த்தாகாகவும் இருந்து வர்தார்கள். அதனை தொடர்ந்து வெள்ளூரை சேர்ந்த மூக்கன், மதவை சி. ராமசந்திரன், பண்டாரம், முதல் மூக்கன் வரை தலைவர்களாக இருந்த கால கட்டத்தில் நாட்டான் குளத்தை சேர்ந்த எஸ்.கந்தசாமி, பொது செயலாளர்களாக இருந்தார்.

அதனை தொடர்ந்து மேற்கூறிய பல தலைவர்கள் பணி ஓய்வு பெற்ற பின் சில பேர் மட்டும் பம்பாயில் இருந்து வருகிறார்கள். சிலர் தாயகம் சென்று விட்டனர். இந்த நிலையில் ஆலயத்தை செம்மைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வருடம் பந்தல் போட்டு கணபதி விழாவினை நடத்தி வந்த இந்த ஸ்ரீகணேசர் ஆலயத்திற்கு நிரந்தரமாக கொட்டகை வேண்டும் என்று எ்ண்ணி அப்போது மும்பையில் கவுன்சிலர் தேர்தல் நடந்த நேரத்தில் ஓட்டுகேட்டு வந்த வேட்பாளர் ராமகிருஷ்னனிடம் பி.எஸ் கந்தசாமி ஆர். கொம்பையா, பி.எஸ். பட்டன். எம்.பண்டாரம் மற்றும் எம்.அய்யனார், எஸ். நெல்லையப்பா போன்ற சமுதாய முன்னோடிகள் விண்ணப்ப மனு கொடுத்தனர். அதில் தேர்தலுக்கு முன் ஆலயத்தில் சுவர்மற்றும் கொட்டகை போட்டு கொடுத்தால் எங்களது வாக்குகள் அனைத்தும் உங்களுக்கு அளிப்போம் என்று உத்திரவாதம் அளித்தனர். அதன்படி சிமெண்ட் கொட்டகை போட்டு முடித்தார்கள்.

முன்னோர்கள் சொல்லியதை சிறிதும் மறக்காமலும் இந்த சமூதாயத்திற்கும் ஸ்ரீ கனேசர் ஆலயத்திற்கும் மக்களின் பேராதரவோடு தொண்டு செய்து வருவதுடன் இளைய சமுதாயத்திற்கு ஒருஎடுத்து காட்டாக விளங்கி வருவதை யாராலும் மறுக்க கூடியது இல்லை. தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கமும் கணேசர் ஆலயமும் பல முன்னோடிகளையும் பல தியாக உள்ளங்களையும் கொண்டது என தெரிவித்துள்ளனர். தற்போது பி.எஸ்.கே.முத்துராமலிங்கம் தலைமையில் தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கமும் கணேசர் கோயில் கமிட்டியும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>