கட்சி நட்பு குடும்ப பேதமின்றி அனைத்து ஊழலையும் களைய முயல்வேன் -நடிகர் கமல்ஹாசன்:கதிர்

201707271050379615_Party-friendly-family-I-will-try-to-erase-all-corruption_SECVPF

தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை நடிகர் கமல்ஹாசன் முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர்கள், கமல்ஹாசனுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ‘கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது. அவர் அரசியலுக்கு வந்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று விமர்சனம் செய்தார்.கமல்ஹாசனை தி.மு.க தூண்டி விடுகிறது என்றும் தி.மு.க நடத்திய ஊழல்களை அவர் ஏன் தட்டி கேட்கவில்லை எனவும் அமைச்சர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் கமல்ஹாசன் விஸ்வரூபம் எடுத்து, அரசு நிர்வாகத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அந்தந்த துறை அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு பரபரப்பு வேண்டு கோள் விடுத்தார். பின்னர் அமைச்சர்களுடைய இணையதள முகவரிகள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டன. கமல்ஹாசன் அரசுக்கு எதிராக தினமும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிடுவதும், அதற்கு அமைச்சர்கள் பதில் அளிப்பதும் தொடர்ந்து வருகிறது.

கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் என டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் நிலை குறித்து பரபரப்பான கருத்துகளை கூறி வருகிறார் கமல்ஹாசன்.

சமீபத்தில் எல்லாத்துறையிலும் ஊழல் உள்ளது என இவர் கூறியதற்கு ஆளும்கட்சி அமைச்சர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>