கடலூர் அருகே ரசாயன ஆலை செயல்பட கிராம மக்கள் எதிர்ப்பு

Daily_News ஜக்காம்மா

கடலூர்: கடலூர் அருகே குடிகாடு கிராமத்தில் ரசாயன தொழிற்சாலையின் முகப்பு கதவுகள் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குடிகாடு கிராமத்தை ஒட்டி சிப்காட் வளாகத்தில் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளிவரும் வாயுவால் காற்று மாசுபடுவதோடு மூச்சு திணறலும் ஏற்படுகிறது என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டு. இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் முன்பாக ரசாயன ஆலை நிர்வாகம் முகப்பு கதவு அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஓராண்டுக்கு முன்னர் கதவு அமைக்கும் பணியை ஆலை நிர்வாகம் மேற்கொண்ட போது மக்களின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியுடன் முகப்பு கதவை மீண்டும் ஆலை நிர்வாகம் அமைத்து வருகிறது என்று பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>