கடம் தயாரிப்பாளர் காலமானார்

தேசியவிருது பெற்ற புகழ்பெற்ற கடம் தயாரிப்பாளர் மீனாட்சி அம்மாள் மறைவு. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை குலாலர் தெருவில் வசித்து வந்தவரும் புகழ்பெற்ற இசை வாத்தியம் கடம் தயாரிப்பாளர் தேசிய விருது பெற்ற வ.மீனாட்சி அம்மாள் காலமானார்.WhatsApp Image 2017-11-07 at 7.05.31 AM

மத்திய மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சங்கீத நாடக அகடமி, 60 ஆண்டுகளை கண்ட அமைப்பு. ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு புரஸ்கார் விருதுகளை வழங்கி கவுரவித்து வரும் இந்த அமைப்பு, முதல்முறையாக 2013ல், கடம் தயாரிக்கும் கலைஞரான மானாமதுரை மீனாட்சி அம்மாளுக்கு புரஸ்கார் விருதை அளித்தது.ghatam454-jakkamma

மண்பாண்டத் தொழிலுக்கு பேர் போன மானாமதுரையில் கடம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரே குடும்பம் மீனாட்சி அம்மாளின் குடும்பம் தான். சுமார் 150 ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகிறார்கள். இவர்களின் கைப்பக்குவத்தில் உரு வான ‘கடம்’கள் இந்தியாவில் மட்டு மின்றி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அமெரிக்கா, லண்டன், இலங்கை, ஜப்பான், மலேசியா என சர்வதேச இசைக் கலைஞர்களின் கைகளிலும் கிடுகிடுத்துக் கொண்டிருக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>