ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தது ஏன்? ஓய்வு பெற்ற டி.ஜி.பி. திலகவதி

ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் 45 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டு, பேசிய வார்த்தைகளும், அவருடைய துணிச்சலும் என்னை கவர்ந்தது.

ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் 45 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டு, பேசிய வார்த்தைகளும், அவருடைய துணிச்சலும் என்னை கவர்ந்தது.

35 ஆண்டு காலம் போலீஸ் துறையில் பணியாற்றி மக்கள் துயரங்களை தீர்த்து நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கி இருக்கிறேன். ஓய்வு பெற்ற பின்னரும் மக்கள் துயரங்களை துடைப்பதற்காக சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினேன். இதற்கு ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இருக்க வேண்டும் என்பதால், எந்த கட்சியில் சேரலாம் என்று குழப்பத்தில் இருந்தேன். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் 45 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டு, பேசிய வார்த்தைகளும், அவருடைய துணிச்சலும் என்னை கவர்ந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் குறுகிய கால ஆட்சியை திறம்பட அவர் ஆற்றி இருந்ததால், ஏற்கனவே அவர் மீது மரியாதையும், அபிப்பிராயமும் இருந்தது. எனவே அவரது தலைமையை ஏற்று கட்சியில் இணைந்துள்ளேன். நாளை தமிழகத்தை ஓ.பன்னீர்செல்வம் ஆள்வார். மக்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>