ஓசூர் அருகே பள்ளி மாணவர்கள் 40 பேரை சரமாரியாக தாக்கிய விடுதி காப்பாளர் கைது

பன்றிகளை விடுதிக் காப்பாளர் லூயிஸ் ராஜ் பராமரித்து வருகிறார். இந்நிலையில், மாணவர்கள் சிலர் பன்றிகள் மீது கல்வீசி தாக்கியதாக  கூறப்படுகிறது. இதையடுத்து 40க்கும் மேற்பட்ட மாணவர்களை லூயிஸ் ராஜ் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

பன்றிகளை விடுதிக் காப்பாளர் லூயிஸ் ராஜ் பராமரித்து வருகிறார். இந்நிலையில், மாணவர்கள் சிலர் பன்றிகள் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 40க்கும் மேற்பட்ட மாணவர்களை லூயிஸ் ராஜ் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பள்ளி மாணவர்களை விடுதி காப்பாளர் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரை அடுத்த தேன்கணிக்கோட்டை அருகே அண்ணியாளும் கிராமத்தில், அரசு உதவிபெறும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி வளாகத்தில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பன்றிகளை விடுதிக் காப்பாளர் லூயிஸ் ராஜ் பராமரித்து வருகிறார். இந்நிலையில், மாணவர்கள் சிலர் பன்றிகள் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 40க்கும் மேற்பட்ட மாணவர்களை லூயிஸ் ராஜ் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

அதில் பலத்த காயமடைந்த மாணவர்கள், தேன்கணிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் தேன்கணிக்கோட்டை போலீசார் லூயிஸ் ராஜை கைது செய்தனர். பள்ளி வளாகத்தில் பன்றிகளை வளர்ப்பதால் தொற்று நோய் வர வாய்ப்புள்ளதால் பன்றி வளர்ப்பதை தடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>