ஓசூரில் நிலவும் கடும் வறட்சி : குடிநீருக்காக தவிக்கும் மக்கள்

PicsArt_038-11.58.38

ஓசூர்: தமிழக – கர்நாடக எல்லையான ஓசூரில் நிலவும் கடும் வறட்சியால் பயிர்கள் அனைத்தும் கருகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஓசூர் தொழில் நகர் மட்டுமல்ல; மலர் சாகுபடியும் அதிகளவில் நடைபெறும் இடமாகும். மழையின்றி தமிழகம் முழுவதும் நிலவும் வறட்சி ஓசூரையும் விட்டு வைக்கவில்லை. வறட்சி காரணமாக நிலத்தடி நீர் முற்றிலுமாக குறைந்து விட்டதால் நாள்தோறும் குடிநீர் தேவைக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது.

அத்துடன் விவசாயத்திற்கு போதுமான நீரின்றி கருகி விட்டதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ஓசூருக்கு அருகில் 3 கி.மீ. தொலைவில் தெண்பெண்ணை ஆறு உள்ளது. இங்கிருந்து வெளியேறும் உபரி நீரை கிளை கால்வாய்கள் மூலம் ஏரிகளில் நிரப்பினால் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயிம் செழிக்கும். குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் என்கின்றனர் விவசாயிகள். மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>