ஓகி புயலால் மாயமான மீனவர்களை மீட்கக்கோரி கன்னியாகுமரி மீனவர்கள் போராட்டம்

2017-08-12-11-59-11

கன்னியாகுமரி: ஓகி புயலால் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சலில் மீனவர்கள் இன்றும் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக குளச்சல் சுற்று வட்டாரத்தில் உள்ள குறும்பனை, வானியக்குடி, சைமன், கோடிமுனை, புதூர் உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் பேரணியாக புறப்பட்டு குளச்சல் பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் குளச்சலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை குமரி மீனவர்கள் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆனால் அரசு முறையாக கணக்கு எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் காணாமல் போன மீனவர்களை காக்க அரசு தவறி விட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசும், மத்திய அரசும் தமிழக மீன்வர்களின் பாதுகாப்பு மற்றும் நிவாரண தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், ஆனால் அதே வேளையில் இந்தியாவில் உள்ள கேரள அரசு மீனவர்களுக்கு பாதுகாப்பும், நிவாரண உதவியையும் போர்கால அடிப்படையில் அவர்களுக்கு வழங்குவதாகவும், அவர்களை காப்பாற்றுவதில் அங்குள்ள அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். எனவே குமரி மாவட்ட மீனவ கிராமங்களை கேரளாவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் கண்டன ஆர்பாட்டத்தை நடத்த உள்ளனர். குமரி மீனவர்கள் 50 மைல் கல் தொலையில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு புயல் முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கவில்லை என்றும், அதன் காரணமாகவே 13 மீனவர்களும், 2 படகுகளும் கடலில் மூழ்கி விட்டது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குளச்சலில் உள்ள தூய மரியன்னை ஆலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்த மீனவர்கள் 13 பேருக்கு நினைவு திருப்பலியை நிறைவேற்றினார்கள். இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு, குளச்சலில் உள்ள பேருந்து நிலையத்திற்கு பேரணியாக கருப்பு கொடியுடன் சென்றனர். மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அகிம்சை வழியிலே போராட்டம் நடைபெறும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>