ஒலி வடிவமைப்பில் ‘விவேகம்’ சவாலாக இருந்தது: உதயகுமார்:கதிர்

vivegam-first-look-poster-thala-57-ak-57_640x480_61486014311

ஒலி வடிவமைப்பில் ‘விவேகம்’ மிகவும் சவாலாக இருந்தது என ஒலிப்பதிவு பொறியாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 2009 – 2014ம் ஆண்டுகள் வரைக்கான தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்ததுள்ளது. இதில் ’பேராண்மை’ படத்தின் ஒலி வடிவமைப்பு செய்த டி.உதயகுமாருக்கு சிறந்த ஒலிப்பதிவு பொறியாளர் விருது கிடைத்துள்ளது.

‘பேராண்மை’ படத்துக்காக தமிழக அரசு விருது கிடைத்திருப்பது குறித்து உதயகுமார், “கடந்த பத்து வருஷத்துக்கும் மேலாக இந்த துறையில் இருக்கிறேன். பெரிய பட்ஜெட் படங்களும், சின்ன பட்ஜெட் படங்களும்னு நிறைய செய்துள்ளேன். சில படங்கள் ரொம்ப மெனக்கெட்டு பணிபுரிய வேண்டியதிருக்கும். அப்படி செய்த படம் தான் ‘பேராண்மை’.

அப்படத்துக்காக எனக்கு விருது கிடைத்ததில் சந்தோஷம். காடு சம்பந்தப்பட்ட காட்சிகள், ராக்கெட் லாஞ்ச் ஆகிய விஷயங்கள் தான் அப்படத்தில் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஒரு மரத்தை வெட்டும்போது கூட அதோட சத்தம் எப்படி இருக்க வேண்டும் என்று யூகித்து செய்தேன். கமர்ஷியல் படங்களோ, யதார்த்தமான படங்களோ எல்லாவற்றுக்குமான வேலைகள் ஒன்று தான். அதற்கு தகுந்தாற் போன்று எனது பணிகள் இருக்கும்

இந்த மாதிரி விருதுகள்தான் எங்களுடைய அடையாளம். அதுதான் எங்களுக்கு சந்தோஷத்தையும், இன்னும் உழைக்க வேண்டும் என்கிற உத்வேகத்தையும் தருகிறது” என்று தெரிவித்துள்ளார் உதயகுமார்.

தற்போது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘விவேகம்’ படத்துக்காக ஒலிவடிவமைப்பு செய்து வருகிறார் உதயகுமார். அப்படம் குறித்து கேட்டதற்கு, “‘விவேகம்’ படத்தில் ஒலி வடிவமைப்பில் நிறைய பணிகள் இருக்கிறது. அதில் ஒலிக்கான விஷயங்களை சரியான விதத்தில் கொண்டு வருவது மிகவும் முக்கியம். ‘நந்தலாலா’, ‘விசாரணை’க்கு அப்புறம் ‘விவேகம்’ படம் தான் எனக்கு சவாலாக இருந்தது” என்று தெரிவித்தார்.

தற்போது ‘விவேகம்’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘வீரா’, ‘நெருப்புடா’, ‘செம போதை ஆகாத’ உள்ளிட்ட படங்களின் ஒலிவடிவமைப்புக்காக பணிபுரிந்து வருகிறார் உதயகுமார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>