ஒலிம்பிக் : பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து

பாட்மிண்டன் விளையாட்டில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

பாட்மிண்டன் விளையாட்டில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

ரியோ டி ஜெனிரோ : ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் பாட்மிண்டன் விளையாட்டில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

பாட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் இகான் வாங்கை சிந்து எதிர்கொண்டார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பி.வி. சிந்து, உலக தரவரிசையில் முன்னணியில் உள்ள வாங்கை 22-20, 21-19 என்ற நேர் செட் கணக்கில் 54 நிமிடங்களில் போராடி வென்றார்.

2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வாங் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் உலக தரவரிசையில் 6ம் இடத்தில் உள்ள ஜப்பானின் நஜோமி ஓகுஹாராவை எதிர்கொள்ள உள்ளார்.

ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டிகளில் சாய்னா நேவாலுக்குப் பிறகு அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை பி.வி. சிந்து பெற்றுள்ளார். கடந்த ஒலிம்பிக் போட்டியில் சாய்னா வெண்கலப் பதக்கம் வென்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>