ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை உறுதி செய்ய சிறப்புக்குழு அமைத்தார் மோடி

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை உறுதி செய்ய சிறப்புக்குழு அமைத்தார் மோடி

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை உறுதி செய்ய சிறப்புக்குழு அமைத்தார் மோடி

டெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதை உறுதி செய்வதற்காக சிறப்புக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கிரிக்கெட் தவிர இதர விளையாட்டுகளுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலை காணப்படுகிறது. வீரர்கள் போதிய பயிற்சி பெற உரிய களம் அமைத்து கொடுக்காதது வீரர், வீராங்கனை தேர்வு செய்வதில் புகுந்து விளையாடும் அரசியல், வீரர்களை ஊக்குவிப்பதற்கு நிறுவனங்கள் முன்வராதது என பல்வேறு காரணங்களால் தகுதியும் திறமையும் இருந்தும் நமது நாட்டு வீரர்களால் சர்வதேச அளவில் சோபிக்க முடியவில்லை. இதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சிறப்புக்குழு அமைப்பதற்கான அறிவிப்பை மோடி வெளியிட்டுள்ளார்.

இந்தக் குழு அடுத்த 3 ஒலிம்பிக் போட்டிகளுக்கான செயல் திட்டத்தை வகுக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விளையாட்டுக்கான வசதி, பயிற்சி, வீரர்களை தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் உள்பட விளையாட்டுகள் சார்ந்த அனைத்து அம்சங்கள் உள்ளடக்கியதாக இந்த செயல் திட்டம் அமையும் என மோடி தெரிவித்துள்ளார். அண்மையில் முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவால் 2 பதக்கங்கள் மட்டுமே வெல்ல முடிந்தது. பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர் ஆகிய 3 பேர் மட்டுமே ரியோ ஒலிம்பிக் போட்டியில் பிரகாசித்தனர். இதை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கணக்காலி வேல சிறப்புக் குழு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>