ஒரு குடம் குடி தண்ணீர் ரூ.10க்கு வாங்கும் அவலம் : கடும் அவஸ்தையில் பொதுமக்கள்

அழகுமீனாட்சி கடைத்தெருவில் ரோடு வசதி இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது.  லெட்சுமி நகரில் தெருவிளக்கு இல்லை. மெயின் ரோட்டில் மட்டும் ஒரு தெருவிளக்கு உள்ளது.  இதனால் பெண்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அஞ்சுகின்றனர்.   மேலும் இந்தப்பகுதியில் ரோடு வசதி இல்லாததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மழை காலங்களில் சேறும் சகதியில் தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கஞ்சநாயக்கன்பட்டி கிராம ஊராட்சி. இதில் கஞ்சநாயக்கன்பட்டி, காந்திநகர், ராஜுவ்நகர் உள்ளது. 20க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளது. காந்திநகர் பகுதியில் பிள்ளையார்கோவில் தெரு, பஸ் டாப் தெரு, அழகுமீனாட்சி கடைத்தெரு, என உள்ளது. இந்தப் பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை. வாறுகாலில் முட்புதர்கள் அடைத்து கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இந்தப்பகுதியில் ரோடு வசதியும் இல்லை. கஞ்சநாயக்கன்பட்டி ஓடை தூர்வாராததால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. ஓடை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பியுள்ளன. இதனால் கழிவுநீர் வெளியேறமுடியாமல் குளம்போல் தேங்கி கிடக்கிறது.
அழகுமீனாட்சி கடைத்தெருவில் ரோடு வசதி இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது. லெட்சுமி நகரில் தெருவிளக்கு இல்லை. மெயின் ரோட்டில் மட்டும் ஒரு தெருவிளக்கு உள்ளது. இதனால் பெண்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அஞ்சுகின்றனர். மேலும் இந்தப்பகுதியில் ரோடு வசதி இல்லாததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மழை காலங்களில் சேறும் சகதியில் தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

இந்தப் பகுதியை ஒட்டி ஓடை செல்வதால் ஓடையில் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றமும், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் ஊராட்சி மூலம் ஒரே ஒரு அடிகுழய் மட்டும் போடப்பட்டுள்ளது. அதிலும் தண்ணீர் வருவதில்லை. இதனால் லாரிகள் மூலம் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு வாங்கும் நிலைக்கு இந்தப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். காந்திநகர் பகுதி மக்களுக்கு பஸ் ஸ்டாப் வசதி இல்லை. எனவே தேவையான அடிப்படை வசதிகளை கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகம் செய்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காந்திநகர் நாகஜோதி கூறுகையில், ‘கஞ்சநாயக்கன்பட்டி ஓடை பராமரிப்பு இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் வீடுகளில் இருக்கமுடியவில்லை. பலமுறை ஓடையை தூர்வாரி கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தில் கூறியும் எந்தவித பயனும் இல்லை’ என்றார். லெட்சுமிநகர் பாண்டிச்செல்வி கூறுகையில், ‘எங்கள் பகுதியில் குடிநீர் வசதி இல்லை. அடிகுழாய் இருந்தும் தண்ணீர் வரவில்லை. குடிநீருக்காக அலையவேண்டியுள்ளது. ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்றார்.

லெட்சுமிநகர் லதா: தெருவிளக்கு சரிவர அமைக்கப்படவில்லை. இதனால் இந்தப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. பெண்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியவில்லை. எனவே போதுமான தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். லெட்சுமிநகர் இந்திரா கூறுகையில், ‘சாலை வசதி இல்லை. மழை பெய்தால் சேறும் சகதியுமாக உள்ளது. நடந்து செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது. வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கு தேங்குகிறது. முறையான ரோடு வசதி, வாறுகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றார். பிள்ளையார்கோவில் தெரு அழகுராமானுஜம்: காந்திநகர் பகுதியில் ரோடு பெயர்ந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லை. வளர்ந்து வரும் பகுதியாக உள்ள காந்திநகரில் அடிப்படை அறவே இல்லை. இருந்த பஸ் ஸ்டாப்பும் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படவில்லை. இதனால் மழை வெயிலுக்கு பேருந்து நிறுத்தத்தில் நிற்பவர்கள் ஒதுங்கக்கூட முடியாமல் அவதிப்படுகின்றனர் என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>