ஒருவரே மறுபடி மறுபடி வந்து பணத்தை மாற்றுவதை தடுக்க கையில் அழியாத மை வைக்கப்படும் : சக்திகாந்த தாஸ்

2016-15-11-13-03-33n

புதுடெல்லி: பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொருளாதாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். அப்பாவி மக்களிடம் பணத்தை கொடுத்து கருப்பு பண முதலைகள் மாற்ற முயற்சி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். ஒருவரே பலமுறை வங்கிக்கு வங்கிகளில் நீண்ட வரிசை வருவதாக சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார். கோயில்களில் சேரும் குறைந்த மதிப்பு ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜன்தன் கணக்குகளை பயன்படுத்தி பெருந்தொகையை டெ்பாசிட் செய்ய முயற்சி செய்வதாகவும், ஜன்தன் கணக்குகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். கள்ளநோட்டுகள் மாற்றப்படுவதை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கையில் மை வைக்கப்படும்

வங்கியில் பணம் மாற்றியவர்கள் கையில் அழியாத மை வைக்கப்படும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மை வைக்கப்படுவது பெருநகரங்களில் இன்று முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஒருவரே மறுபடி மறுபடி வந்து பணத்தை மாற்றுவதை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

போதிய அளவு உப்பு உள்ளது

தேவைக்கு அதிகமாகவே நாட்டில் உப்பு உள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். உப்பு, அத்தியாவசிய பொருட்களை தேவையான இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>