ஒருதலைக் காதலால் : ஆசிரியரை வெட்டிக் கொன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ஒருதலைக் காதலால் : ஆசிரியரை வெட்டிக் கொன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ஒருதலைக் காதலால் : ஆசிரியரை வெட்டிக் கொன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பள்ளி ஆசிரியரை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொன்று, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி, இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நியூமேன் மகள் பிரான்சினா (25). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலைப் பார்த்து வந்தார். வழக்கம் போல இன்று பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற பிரான்சினா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட் கிறிஸ்துவ ஆலயத்தில் நடந்த வழிபாட்டில் கலந்து கொண்டார்.

அப்போது அங்கே, அரிவாளுடன் வந்த இளைஞர் ஒருவர் திடீரென ஆசிரியை பிரான்சினாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். தலை உள்ளிட்ட உடலில் பல இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. உடனே அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருந்த ஆசிரியருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகையில், ஆசிரியை பிரான்சினாவை அரிவாளால் வெட்டிய இளைஞர், தூத்துக்குடி மரக்குடி பகுதியில் வசிக்கும் ஜோதியின் மகன் கிஜன்(25) எனத் தெரிய வந்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>