ஒடிஷாவில் தாயின் உடலை ரிக்க்ஷாவில் எடுத்துச் சென்ற மகன்

தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் 12 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்டதால் வேறு வழியின்றி கை ரிக்க்ஷா ஒன்றை வாடகைக்கு பிடித்து உடலை எடுத்துச் சென்றதாக அந்த நபர் தெரிவித்தார்.

தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் 12 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்டதால் வேறு வழியின்றி கை ரிக்க்ஷா ஒன்றை வாடகைக்கு பிடித்து உடலை எடுத்துச் சென்றதாக அந்த நபர் தெரிவித்தார்.

ஒடிஷா மாநிலத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த தாயின் உடலை அவரது மகன் கை ரிக்க்ஷாவில் வைத்து ஊருக்கு தள்ளிக்கொண்டே சென்ற அவலம் நடந்துள்ளது.

ஒடிஷாவின் ஜேய்ப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ‌சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தாயின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ‌மருத்துவமனை நிர்வாகத்திடம் ‌அவரது மகன் வாகன உதவி கேட்டதாக தெரிகிறது. ஆனால் வாகனம் இல்லை என நிர்வாகம் கூறிவிட்டதாக இறந்த பெண்ணின் மகன் தெரிவித்தார். தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் 12 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்டதால் வேறு வழியின்றி கை ரிக்க்ஷா ஒன்றை வாடகைக்கு பிடித்து உடலை எடுத்துச் சென்றதாக அந்த நபர் தெரிவித்தார். எனினும் குறிப்பிட்ட அந்த‌ நபர் வாகனம் கேட்டு தங்களை அணுகவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>