ஒடிசாவில்ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் 6 பேர் பலி!20 பேர் படுகாயம்

2016-21-9-16-44-22mn

ஒடிசாவில் தென்கானல் மாவட்டத்தில் உள்ள சிசு மந்திர் என்ற இடத்தின் அருகே 45 பயணிகளுடன் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சாலை மேல் இருந்த உயர் மின் அழுத்த கம்பி மீது பேருந்து உரசியதில் 11 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். ஒடிசா மின்வாரியம் சார்பாக 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சம்பவம் நடைபெற்றது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி அம்மாநில மின்துறை அமைச்சர் பிரணாப் பிரகாஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>