ஒக்கி புயல் பாதிப்பு: ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர்

palanisamy

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.48,500 முதல் 63,500 வரை நிவாரணம் வழங்கப்படும். மேலும் இரண்டேகால் ஏக்கரில் ரப்பர் மரம் இழப்புக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

ரப்பர் மட்டுமல்லாது, ஊடு பயிர் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். புதிதாக கிராம்பு நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.28,000 வழங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் தோட்டங்களில் தேனி வளர்புக்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 20 தேனி பெட்டிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>