‘ஐ லவ் யு’நான் ஜெயிலுக்கு போறேன் : மு.திலிப்

2017-16-07-12-47-22ஜக்கம்மா

பலவகையான காதல்களை பார்த்திருக்கிறோம். காதலை சொல்வதில் புதுப்புது டெக்னிக் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில், அமெரிக்காவில் ஒருவர் தனது காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் பெயர் பிராண்டன் தாம்சன். ஓக்லஹோமா மாகாணத்தை சேர்ந்தவர். குற்ற வழக்கு ஒன்றில் 6 முறை வாரண்ட் பிறப்பித்தும் ஆஜராகாததால், போலீசார் பிராண்டனை கைது செய்ய வீட்டிற்கு வந்துள்ளனர். அன்று அவருக்கு பிறந்தநாள்.

தான் காதலிக்கும் பெண்ணுக்கு தனது பிறந்தநாளில் ‘ஐ லவ் யு’ சொல்ல திட்டமிட்டிருந்தார். அந்த நேரத்தில் போலீசார் வந்து விடவே விஷயத்தை கூறியிருக்கிறார். போலீசாரும் பெரிய மனது பண்ணி, பிராண்டனை, அவர் விரும்பும் பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஜெயிலுக்கு போகும் முன், தனது காதலை பிராண்டன் வெளிப்படுத்தினார். இதை போலீசார் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஜெயிலுக்கு போகும் நேரத்தில் கூட ஆசையோடு வந்த பிராண்டனின் காதலை அவரது காதலி ஏற்றுக் கொண்டதுதான். காதல் பரிசாக காதலிக்கு மோதிரத்தை அணிவித்து போலீசுடன் சென்று விட்டார் பிராண்டன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>